தமிழகத்தில் அரங்கேறிய மணல் திருட்டு: 2 பேர் கைது!

Update: 2025-03-17 16:33 GMT

விருதுநகர் மாவட் டம், நரிக்குடி அருகேயுள்ள முள்ளிக்கு டியில் மணல் திருட்டுக்குப் பயன்படுத் தப்பட்ட லாரி, பொக்லைன் இயந்திரத்தைப் பறிமுதல் செய்த போலீஸார், இது தொடர்பாக இருவரை சனிக்கிழமை கைது செய்தனர். நரிக்குடி அருகேயுள்ள முள்ளிக்குடி பகுதியில் கிராம நிர்வாக அலுவலர் பால்சாமி, கிராம உதவியாளர் ஊர்காவலன் ஆகியோர் ரோந்துப் பணியில் ஈடு பட்டனர்.


அப்போது, அந்தப் பகுதியில் கொட்டி வைக்கப்பட்டிருந்த மணலை பொக்லைன் இயந்திரம் மூலம் லாரியில் ஏற்றிக்கொண்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து கிராம நிர்வாக அலு வலர் நரிக்குடி காவல் நிலைய போலீ ஸாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த போலீஸார், லாரி, பொக்லைன் இயந்திரத்தைப் பறிமுதல் செய்தனர். மேலும், மணல்திருட்டில் ஈடுபட்ட திரு மலை குபேரன்,  பூபாலன் ஆகி யோரைக் கைது செய்தனர்.

Similar News