ஜீல் பீர் வேண்டும் என்றால் ரூ.50 எக்ஸ்ட்ரா... மதுப்பிரியர்கள் புகார்!

Update: 2024-03-19 11:01 GMT

தமிழக அரசின் கீழ் தமிழகத்தில் டாஸ்மார்க் நிறுவனம் மதுபானங்களை விற்பனை செய்து வருகிறது. மொத்தம் 4820 கடைகள் மூலம் விற்பனையாகும் மதுபானங்கள் தினமும் சராசரியாக 150 கோடி மதிப்பிலான பீர் வகைகள் மற்றும் மது வகைகள் விற்பனையாகிறது. 

கோடை வெயில் தற்போது சுட்டெரித்து வருகிறதால் குடிமகன்கள் பலரும் வெப்பத்தை தணிப்பதற்கு குளிர்ச்சியான பீரை வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதனால் தற்பொழுது டாஸ்மாக் கடைகளில் வழக்கமாக விற்பனை செய்யப்படும் பீர் விற்பனையில் ஒரு லட்சம் பெட்டியை தாண்டி கூடுதலாக 1.20 லட்சம் பெட்டிகள் விற்பனையாகி வருகிறது. 

இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திய மது கடை ஊழியர்கள் குளிர்ச்சியான பீரை வாங்குவதற்கு கூடுதலாக பாட்டில் ஒன்றிற்கு 50 ரூபாய் வரை வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. அதாவது பீரை குளிர்ச்சியாக தான் குடிக்க முடியும் வழக்கமாக பத்து ரூபாயைத் தான் ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக வசூலிப்பார்கள் ஆனால் தற்போது பீரின் தேவை அதிகரித்துள்ளதால் குளிர்ச்சியான பீருக்கு ரூபாய் 50 வரை கூடுதலாக கேட்கிறார்கள் அதை தர மறுத்தால் குளிர்ச்சி இல்லாத பீரை கொடுக்கிறார்கள் என்று சில மதுபிரியர்கள் குற்றம் சாடி வருகின்றனர். 

Source : Dinamalar

Similar News