பெண்களுக்கான மோடியின் உத்திரவாதம்..! 50,000 வரை பெண்கள் நிதி உதவி பெறும் சுபத்ரா யோஜனா!

Update: 2024-05-16 13:24 GMT

நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் மக்களவைத் தேர்தலும் சட்டமன்ற தேர்தலும் ஒடிசாவில் நடைபெற உள்ள நிலையில் அங்கு பாஜக தனது சங்கல்ப் பத்ரா என்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த தேர்தலில் அறிக்கையில் சுபத்ரா யோஜனா என்ற முக்கியமான வாக்குறுதி ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே இந்த திட்டத்தை பாஜக மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் அமல்படுத்தி வெற்றிகரமாக திட்டமாக மாற்றியது. அதாவது இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு 50,000 பணத்திற்கான வவுச்சர் வழங்கப்படும் அதன் மூலம் பெண்கள் அந்த வவ்ச்சரை பயன்படுத்தி 50 ஆயிரம் ரூபாய் வரை இரண்டு ஆண்டுக்குள் பணமாக பெற்றுக் கொள்ளலாம். 

பெண்களுக்கு நிதி உதவி கொடுத்து அதன் மூலம் அதிகாரத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா தெரிவித்துள்ளார். இது மட்டும் இன்றி அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூபாய் 12000 மற்றும் அங்கன்வாடி உரிமையாளர்களுக்கு ரூபாய் 8000 என சம்பளத்தையும் உயர்த்துவதாக பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. 

Source : Asianet news Tamil 

Similar News