அமெரிக்காவில் செழிக்கும் இந்து மதம் - வடக்கு கரோலினா வெங்கடேஷ்வரா கோவிலில் 87 அடி பிரம்மாண்ட கோபுரம்!

Update: 2022-10-29 06:19 GMT

அமெரிக்காவில் இந்து கோவில் 

அமெரிக்காவில் உள்ள வெங்கடேஷ்வரா கோவிலில், 87 அடி உயரத்தில் பிரமாண்ட கோபுரம் கட்டப்பட்டது. அமெரிக்க வாழ் இந்தியர்கள் மற்றும் அங்கு வசிக்கும் இந்துக்கள் கோபுரத்தை திறந்து வைத்தனர். வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள இந்த கோவில் 2009ல் திறந்து வைக்கப்பட்டது. 87 அடி உயரத்தில் பிரமாண்ட கோபுரம் கட்டுவதற்கான பணி, 2020ஆம் ஆண்டு துவங்கியது.

கொரோனாவால் சுணக்கம் 

கொரோனாவால் கோபுரம் அமைக்கும் பணி தடைபட்டது. பிறகு மீண்டும் தொடங்கப்பட்டு அனைத்து கட்டுமான வேலைகளும் முடிந்தது. 87 அடி பிரமாண்ட கோபுரம் திறந்து வைக்கப்பட்டது. வடக்கு கரோலினா மாகாண கவர்னர் காரி கூப்பர் இந்த கோபுரத்தை திறந்து வைத்தார்.

 வடக்கு கரோலினா மாகாண கவர்னர் பெருமிதம் 

இது, வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள். உங்கள் கவலைகளை வெளியில் விட்டு விட்டு, சிறிது நேரம் பயபக்தியுடன் கோவிலுக்குள் நடந்து செல்வது மிகச் சிறந்த அனுபவமாக இருக்கும். கோவிலில் இருந்து வெளியேறும்போது ஆத்ம திருப்தி ஏற்படுவதை கண்டிப்பாக நீங்கள் உணரலாம் என வடக்கு கரோலினா மாகாண கவர்னர் பேசினார்.

கோவில் அறக்கட்டளை தலைவர் ராஜ் தோடகுரா

கோபுரம் என்பது, கடவுளின் பாதம் போன்றது. பக்தர்கள் கோவிலுக்குள் வருவதற்கு முன், இறைவனின் பாதங்களில் பணிந்து, தங்கள் கவலைகள் அனைத்தையும் விட்டுவிடுகின்றனர் என்பது ஐதீகம்.இந்த சிறப்பு மிக்க கோபுரம், அமெரிக்கா வாழ் இந்தியர்களில் பெருமை மிகு கலாசாரமாக இருக்கும். அமெரிக்க வாழ் இந்தியர்கள் மற்றும் ஹிந்து அமைப்புகளிடமிருந்து வந்த நன்கொடை வாயிலாக இந்த கோபுரம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்று கோவில் அறக்கட்டளை தலைவர் ராஜ் தோடகுரா கூறினார். 

Input From: Dinamalar 


Similar News