ஆணிவேரை நெருங்கும் NIA! PFI விவகாரத்தில் அடுத்து என்ன?

Update: 2023-11-07 03:26 GMT

பிஎஃப்ஐ'க்கு எதிராக என் ஐ ஏ அதிரடி...

கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் சட்ட விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை ஐந்து ஆண்டுகளுக்கு தடை விதித்தது மத்திய உள்துறை அமைச்சகம். இது தொடர்பாக மத்திய உளவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது, அதில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அதன் தொடர்புடைய அல்லது அதனுடன் இணைந்த அமைப்புகளும் நாட்டின் உரிமை காடு பாதுகாப்பு இறையாண்மை ஆகியவற்றை சீர்குலைக்கும் விதமாக பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளதாகும், நாட்டின் அரசியல் சட்ட அமைப்பை பொது ஒழுங்கை சீரழிக்கும் தொடர்பு ஈடுபட்டதாலும் இந்த அமைப்பை கட்டுப்படுத்துவது அவசியம் என மத்திய அமைச்சகம் குறிப்பிட்டு இருந்தது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதனுடன் தொடர்புடைய மற்றும் இணைந்த ரெஹாப் இந்தியா பவுண்டேஷன், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, அகில இந்திய இமாம்கள் கவுன்சில், மனித உரிமை அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பு, ஜூனியர் முன்னணி, தேசிய மகளிர் முன்னணி, எம்பவர் இந்தியா பவுண்டேஷன் என அனைத்து அமைப்புகளையும் 1967 வது பிரிவின் கீழ் சட்ட விரோத அமைப்புகளாக அறிவித்து இதனை தடை செய்தது மத்திய உள்துறை அமைச்சர்.

இந்த தடையை அடுத்து நாடு முழுவதும் அந்த அமைப்பு தொடர்புடைய அனைத்து இடங்களிலும் என்ஐஏ சோதனை நடத்தியது. இந்த சோதனையானது தமிழகத்தில் குறிப்பாக சென்னை, மதுரை, கடலூர், ராமநாதபுரம், தொண்டி, நாகப்பட்டினம் என அனைத்து பகுதிகளிலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் இணைந்திருக்கும் மற்ற அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் முக்கிய நபர்கள் அனைவரிடமும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தியது மட்டுமின்றி அவர்களை கைது செய்தது.

இந்த விசாரணையின் முடிவில் பரக்கத்துல்லாஹ், அகமது இத்ரீஸ், முகமது அபுதாஹிர், காலித் முகமது, சையது இசாக், காஜா முகைதீன், யாசர் அராபத், பயாஸ்அஹ்மத் ஆகியோர் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கருதி அவர்களது ஜாமீன் மனுவை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் இவர்களின் ஜாமீன் மனுவில் நிபந்தனை ஜாமினை கடந்த மாதம் வழங்கியது.

தற்பொழுது இந்த வழக்கு கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகளான அப்துல் ரசாக், முகமதுயூசுப் மற்றும் கைசர் ஆகியோருக்கு எதிராக என் ஐ ஏ அதிகாரிகள் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது.

இதுகுறித்து என் ஐ ஏ அதிகாரி தெரிவிக்கும்போது தீவிரவாதத்தையும் தீவிரவாத சித்தாந்தத்தையும் ஆதரித்து பரப்பி கொண்டிருக்கின்ற இயக்கமாக கருதி அரசால் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் 10 பேர் மீதான குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த அமைப்பின் தலைமையகமான சென்னை புரசைவாக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் முடிவு முக்கிய ஆதாரங்களும் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.

இதனால் இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையாக் என் ஐ ஏ அதிக தீவிரமாக தேடுதலை துவங்கும். மேலும் இந்த அமைப்பின் ஆணிவேர் எங்கு உள்ளது? இந்த அமைப்புடன் இன்னும் தொடர்புடையவர்கள் எத்தனை பேர் இதுவரை இந்த அமைப்பாளர் மேற்கொள்ளப்பட்ட செயல்கள் என்னென்ன என்ற அனைத்து கோணத்திலும் என் ஐ ஏ விசாரித்து தேடுதல் வேட்டையில் இறங்கும் எனவும் சில தகவல்கள் கசிந்துள்ளது. இதுமட்டுமில்லாமல் இந்த விவகாரத்தில் கைது நடவடிக்கைகள் அதிகப்படுத்தப்படலாம் என வேறு சில செய்திகள் வருகின்றன.

Similar News