சரக்கு ஏற்றும் சேவை மூலம் கடந்த எட்டு மாதங்களில் ரயில்வேக்கு ஒரு லட்சம் கோடி வருமானம் - அசத்தும் மத்திய அரசு

சரக்கு ஏற்றுதல் மூலம் கடந்த எட்டு மாதங்களில் ரயில்வே துறைக்கு ஒரு லட்சம் கோடி வருமானம் கிடைத்துள்ளது

Update: 2022-12-02 13:30 GMT

2022 - 23ஆம் நிதியாண்டின் முதல் 8 மாதங்களுக்கான இந்திய ரயில்வேயின் சரக்கு ஏற்றுதல் கடந்த ஆண்டின் இதே காலத்துக்கான வருவாயை கடந்துள்ளது. கடந்தாண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரை 903.16 டன் சரக்கு ஏற்றப்பட்டு உள்ளது. இந்த ஆண்டில் நவம்பர் மாதம் வரை 978.72 டன் ஏற்றப்பட்டு இருக்கிறது. இது 8% வளர்ச்சியாகும். சரக்கு ஏற்றுதல் வருவாயை பொறுத்தவரை கடந்த ஆண்டு 91,127 கோடி கிடைத்துள்ளது.


இந்த ஆண்டு  ரூ.1,05,905 கோடி கிடைத்து இருக்கிறது. இது 16 சதவீதம் வளர்ச்சியாகும் .வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட அணுகுமுறை, வணிகம் , மேம்பாட்டு பிரிவுகளின் பணி மற்றும் சுறுசுறுப்பான கொள்கை ஆகியவை இந்த சாதனையை அடைய உதவியதாக ரயில்வே தெரிவித்து இருக்கிறது.





 


Similar News