10 பேரை தேர்வு செய்தார் பிரதமர் மோடி: ஏன் எதற்காக தெரியுமா?

Update: 2025-02-25 11:27 GMT
10 பேரை தேர்வு செய்தார் பிரதமர் மோடி: ஏன் எதற்காக தெரியுமா?

உடல் பருமனுக்கு எதிரான விழிப்புணர்வு இயக்கத்திற்கு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா என பிரதமர் மோடி 10 பேரை தேர்வு செய்துள்ளார். மங்கி பாத் நிகழ்ச்சியில் உடல் பருமன் குறித்த பிரதமர் மோடி பேசும் போது, எட்டில் ஒருவர்க்கு உடல் பருமன் பிரச்சனனயால் அவதி படுகின்றனர். குழந்தைகளிடம் இந்த பிரச்சனை தற்பொழுது அதிகரித்து வந்துள்ளது. உடல் பருமன் பல வகையான நோய்களையும் உடல் உபாதைகளை உருவாக்குகிறது. உங்களுடைய உணவில் பயன்படுத்தும் எண்ணையில் 10 சதவீதத்தை குனறயுங்கள்.


உணவுக்காக என்னை வாங்கும் போது பத்து சதவீதம் குறைத்துக் கொள்ளுங்கள் இதை ஒரு சவாலாக எடுத்து நீங்கள் எண்ணெயை குறைக்கும் அதே நேரத்தில் 10 பேரிடம் இருக்கின்ற சவாலை முன்வையுங்கள் இதனால் உடல் பருமன் பிரச்சனையில் இருந்து விடுபட முடியும் இவ்வாறு அவர் பேசினார்.உடல் பருமனுக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் பிரச்சாரம் செய்யவும், எண்ணெய் கலந்த உணவு பொருட்கள் சாப்பிடுவதை தவிர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பிரதமர் மோடி நடிகர்கள்,விளையாட்டு வீரர்கள் மற்றும் தொழிலதிபர்கள் என பத்து பேரை தேர்வு செய்துள்ளார்.


தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா, போஜ்புரி நடிகர் நிராஹீவா இந்துஸ்தானி, ஆத்தி சுடிதார் வீராங்கனை மனு பாக்கர், அழுத்துக்கும் வீராங்கனை மீராபாய் சானு, நடிகர் மோகன்லால் மற்றும் மாதவன் பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் ராஜ்யசபா எம்.பி சுதா மூர்த்தி, ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, தொழிலதிபர் நந்தன் நிலேகனி ஆகியோரின் பெயர்களை இந்திய பிரதமர் தேர்வு செய்துள்ளார்.இந்த விழிப்புணர்வு இயக்கத்திற்கு வலுசேர்க்கவும், தான் தேர்வு செய்தவர்கள் தல 10 பேருக்கு இந்த சவாலை விடுக்கும்படி பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.

Similar News