இந்தியாவில் 100 கோடி செல்போன்கள் பயன்பாட்டில் உள்ளன - பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியாவில் 100 கோடி செல் போன்கள் பயன்பாட்டில் உள்ளன என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.

Update: 2023-03-23 07:15 GMT

தலைநகர் டெல்லியில் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் பகுதி அலுவலகம் மற்றும் புத்தாக்க மையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த மையமானது இந்தியா, நேபாளம், பூட்டான், வங்காளதேசம், இலங்கை, மாலத்தீவுகள் ஆப்கானிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளுக்கு சேவையாற்றும் .அத்துடன் நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதோடு பிராந்தியத்தில் பரஸ்பர நன்மை பயக்கும் பொருளாதார ஒத்துழைப்பை வளர்க்கும் . இந்த விழாவில் பேசும்போது பிரதமர் மோடி கூறியதாவது :-


அதிவேகமாக 5-ஜி தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்த நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. இந்த தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்த 120 நாட்களில் 125 நகரங்களுக்கு விரிவுபடுத்தியாகிவிட்டது. இது நாட்டின் நம்பிக்கையை காட்டுகிறது. 4-ஜி தொழில்நுட்பத்திற்கு முன்பாக தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிற நாடாக மட்டுமே இந்தியா இருந்தது . ஆனால் தற்போது இந்தியா இந்த தொழில்நுட்பத்தின் ஏற்றுமதியாளராக அதிவேகமாக முன்னேறி வருகிறது. வரும் நாட்களில் பயிற்சி தொழில்நுட்ப ஆய்வுக்கூடங்கள் 100 உருவாக்கப்படும்.


இந்தியாவின் தனித்துவமான தேவைகளுக்கு ஏற்ப 5ஜி செயல்களை மேம்படுத்துவதற்கு இந்த ஆய்வுக்கூடங்கள் உதவும். இந்த பத்தாண்டுகள் தொழில்நுட்ப பத்தாண்டுகள் ஆகும். இந்தியாவில் தற்போது 100 கோடி செல்போன்கள் பயன்பாட்டில் உள்ளன . உலகிலேயே செல்போன்கள் இணைப்புகள் அதிகம் உள்ள ஜனநாயகம் இந்தியா தான். இவ்வாறு அவர் கூறினார் . இந்த விழாவின் பொது பிரதமர் மோடி பாரத் 6-ஜி தொலைநோக்குப் பார்வை ஆவணத்தை வெளியிட்டதுடன் 60 ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சோதனை திட்டத்தையும் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.




Similar News