எல்லைப்பகுதிகளில் சாலை அமைப்பவர்களுக்கு 100% மேல் ஊதிய உயர்வு - மத்திய அரசு அதிரடி.! #NHIDCL #RoadConstruction #Border

எல்லைப்பகுதிகளில் சாலை அமைப்பவர்களுக்கு 100% மேல் ஊதிய உயர்வு - மத்திய அரசு அதிரடி.! #NHIDCL #RoadConstruction #Border

Update: 2020-06-27 11:46 GMT

அரசாங்கத்தின் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் (NHIDCL ) தனது ஊழியர்கள் மற்றும் அவுட்சோர்சிங் ஊழியர்களுக்கான ஊதியத்தில் 100 சதவீதத்திற்கும் மேலான உயர்வு அறிவித்துள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.

உத்தரகண்ட், வட கிழக்கு மாநிலங்கள், ஜம்மு-காஷ்மீர், மற்றும் லடாக் போன்ற உயரமான மற்றும் கடினமான நிலப்பரப்பில் நாட்டின் எல்லை இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பை உருவாக்குவதை விரைவுபடுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடுமையான பணி நிலைமைகளை கருத்தில் கொண்டு லடாக்கில் பணியில் அமர்த்தப்பட்டுள்ள பணியாளர்களுக்கு அதிக ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய உயர்வு தவிர, NHIDCL அதன் ஒப்பந்த ஊழியர்கள் அனைவருக்கும்

ரூ.5 லட்சம் சுகாதார காப்பீடு மற்றும் ரூ .10 லட்சம் ஆயுள் காப்பீடு ஆகியவற்றை உறுதிப்படுத்த முடிவு செய்துள்ளது.

மூர்க்கத்தனமான சீனாவிடமிருந்து, தேசத்தின் இறையாண்மையை உறுதியாகப் பாதுகாக்க, லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டு வரிசையில் (LAC) உள்கட்டமைப்பை அரசாங்கம் தீவிரமாக மேம்படுத்துகின்ற நேரத்தில் இந்த ஊக்குவிப்பு வருகிறது.

இந்த ஊதிய உயர்வு, முன்னணி மற்றும் முக்கியப் பகுதிகளில் சாலைகள் நிர்மாணிக்க திறமையுள்ள பணியாளர்களை தக்கவைத்துக் கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதுபோன்ற இடங்களில் உள்ள வேலையை அதிக லாபகரமானதாக்குவதன் மூலம் பணியாளர்களிடையே உள்ள மனச்சோர்வைக் குறைக்க இது உதவும்.

Source: Times of India

Similar News