பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் திடீர் ஆலோசனை - நடந்தது என்ன?

பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் திடீர் ஆலோசனை - நடந்தது என்ன?

Update: 2020-04-20 03:20 GMT

பிரதமர் மோடி தொலைபேசி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து பேசினார் என தமிழக அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

பிரதமர் மோடி நேற்று(19.04.2020) இரவு 7.30 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது தமிழகத்தில் செய்யபட்டுள்ள கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் நோயின் தாக்கத்தை எவ்வாறு சமாளித்து வருகின்றீர்கள் என கேட்டார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது "தமிழகத்தில் அதிகமான பரிசோதனை செய்ய வேண்டியுள்ளதால் எங்களுக்கு ரேபிட் எனப்படும் பரிசோதனை பெட்டகம் இன்னும் கூடுதலாக வழங்க வேண்டும்" என கோரிக்கை வைத்துள்ளார் தமிழக முதல்வர்.

உடனடியாக ரேபிட் சோதனை கருவிகள் அடங்கிய பெட்டகத்தை அனுப்பி வைப்பதாக பிரதமர் மோடி உறுதியளித்ததாக கூறியுள்ளனர் அந்த செய்தி குறிப்பில்.

Similar News