காதல் வலையில் இளம்பெண்களை விழ்த்தி மோசடி செய்த காசி - சி.பி.சி.ஐ.டி வலையில் விசாரணை!

காதல் வலையில் இளம்பெண்களை விழ்த்தி மோசடி செய்த காசி - சி.பி.சி.ஐ.டி வலையில் விசாரணை!

Update: 2020-06-15 12:48 GMT

தமிழகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை மயக்கி பாலியல் தொடர்பு வைத்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்த காசியை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்

சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் அவனை கைது செய்தனர்.

மேலும் மோசடி, மற்றும் பாலியல் அத்துமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதை அடுத்து காசி குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டான். இதனை அடுத்து காசி மீது மேலும் பல பெண்கள் புகார் அளித்தனர்.

இந்த அனைத்து வழக்குகளையும் விசாரிக்க 5 தனிப்படைகள் மற்றும் சைபர் கிரைம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். விசாரிக்க விசாரிக்க இந்த வழக்கு விரிவடைந்து கொண்டே இருக்கிறது

இந்நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். முதல் கட்டமாக காசியை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

குமரி மாவட்டத்தையே பரபரப்புக்கு உள்ளாக்கிய சென்னை பெண் மருத்துவர் உட்பட பெண்களை காதலித்து ஏமாற்றி பணம் பறித்த வழக்கில் குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையில் இருக்கும் கன்னியாகுமரிமாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த காசி யை 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதி கோரி நாகர்கோவில் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் காசி மற்றும் அவரது நண்பர் டேசன் ஜினோ இருவரையும் நாகர்கோவில் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். காசி மற்றும் அவரது நண்பர் டேசன் ஜினோ இருவரையும் 5 நாட்கள் சிபிசிஜடி காவல் கொடுக்கபட்டது.

மீண்டும் 19-06-2020 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

Similar News