15,000 லஞ்சம் கொடுத்தா வேலை நடக்கும் - வசமாக சிக்கிய அரசு ஊழியர்

நிலத்தை உட்பிரிவு செய்ய விவசாயியிடம் 14,000 லஞ்சம் வாங்கிய அரசு அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-12-16 13:14 GMT

நிலத்தை உட்பிரிவு செய்ய விவசாயியிடம் 14,000 லஞ்சம் வாங்கிய அரசு அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே நிலத்தை உட்பிரிவு செய்ய விவசாயியிடம் 14000 ரூபாய் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார், குமணன்தொழு கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தனது ஐந்து ஏக்கர் பூர்வீக நிலத்தில் 1.4 ஏக்கர் நிலத்தை பிரித்து உட்பிரிவு செய்து தரும்படி மயிலாடும்பாறை குறுவட்ட வானவர் செல்வரங்கனிடம் கோரிக்கை விடுத்தார்.

அதற்கு அவர் பதினைந்தாயிரம் ரூபாய் செல்வரங்கனிடம் கேட்டதாக கூறப்படுகிறது, இது தொடர்பாக ராஜேந்திரன் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் சாரிடம் புகார் கொடுத்தார். தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆலோசனைப்படி அவர் ரசாயனம் தடவிய பணத்தை லஞ்சமாக வழங்கியபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.


Source - Polimer News

Similar News