புதுச்சேரி : என்னாது எனக்கு கொரோனாவா - தப்பிச் சென்ற குற்றவாளி இரண்டு நாட்களுக்கு பின்னர் சரணடைந்து மருத்துவமனையில் அனுமதி.!

புதுச்சேரி : என்னாது எனக்கு கொரோனாவா - தப்பிச் சென்ற குற்றவாளி இரண்டு நாட்களுக்கு பின்னர் சரணடைந்து மருத்துவமனையில் அனுமதி.!

Update: 2020-06-23 11:03 GMT

புதுச்சேரி, முதலியார்பேட்டை காவல்துறையினர் இருசக்கர வாகன திருட்டு வழக்கில் தொடர்புடைய ரமணா(21) என்ற குற்றவாளியை கடந்த வெள்ளிக்கிழமை அன்று கைது செய்து கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது தப்பியோடினார்.

இதனையடுத்து வந்த பரிசோதனை முடிவில் தப்பியோடிய குற்றவாளி ரமணாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் தப்பியோடிய குற்றவாளி ரமணாவை 3தனிப்படைகள் அமைத்து தேடி வந்த நிலையில் ரமணா விழுப்புரம் மாவட்டம் கிடார் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து புதுச்சேரி போலீசார் சென்று பார்த்தபோது அங்கு ரமணா இல்லாததால் அவன் தங்கி இருந்த உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதனிடையே ரமணாவுக்கு கொரோனா தொற்று இருப்பதை அவரது உறவினர்கள் தெரிவித்ததை தொடர்ந்து தப்பியோடியதை போல் இரண்டு நாட்களுக்கு பிறகு தாமாக மீண்டும் மருத்துவமனைக்கு வந்து கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ரமணா யார் யாருடன் தொடர்பில் இருந்தான் என்பது குறித்தும் விசாரனை நடத்தி வருகின்றனர். சிறைக்கு பயந்து மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய கைதி கொரோனாவிற்கு பயந்து மீண்டும் மருத்துவமனைக்கு தாமாக வந்து சேர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Similar News