திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ கொரோனோ தொற்றால் மரணம் - மம்தா உருக்கம்!

திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ கொரோனோ தொற்றால் மரணம் - மம்தா உருக்கம்!

Update: 2020-06-25 02:43 GMT

மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் தமோனஷ் கோஷ் (வயது 60). திரிணாமுல் காங்கிரஸ் கட்சின் பொருளாளராகவும் இருந்தார்.

கடந்த மே)24-ஆம் தேதி இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து, அவர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, அவரது உடல்நிலை மோசமடைந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், நேற்று காலை சிகிக்சை பலனின்றி எம்.எல்.ஏ உயிரிழந்தார். அவருக்கு இதய கோளாறு மற்றும் சுவாச பிரச்சனை ஏற்கனவே இருந்ததாக கூறப்படுகிறது. இவர் தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டம் பால்டா தொகுதியில் இருந்து 3 முறை எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எம்.எல்.ஏ-வின் மறைவுக்கு கட்சி தலைவர், முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "எம்.எல்.ஏ.வின் மறைவு வேதனை அளிக்கிறது. 1998-ஆம் ஆண்டு முதல் பால்டா தொகுதியில் இருந்து 3 முறை எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். கட்சியின் பொருளாளராகவும் பணி யாற்றியவர். 35 ஆண்டுகளுக்கு மேலாக எங்களுடன் இருந்த அவர் மக்கள் மற்றும் கட்சிப்பணிகளை சிறப்பாக ஆற்றியவர். மக்கள் பணிக்காக தன்னை அர்ப்பணித்து கொண்டவர். எங்கள் அனைவரின் சார்பாக அவரது குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Similar News