இங்கிலாந்த்தில் கொரோனா தொற்று ஒழியவில்லை; மக்கள் உணர வேண்டும் - பிரதமர் போரிஸ் ஜான்சன்.!

இங்கிலாந்த்தில் கொரோனா தொற்று ஒழியவில்லை; மக்கள் உணர வேண்டும் - பிரதமர் போரிஸ் ஜான்சன்.!

Update: 2020-06-29 06:38 GMT

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பல நாடுகளில் பெரும் பாதிப்பை உண்டாக்கி உள்ளது. இதனால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து நாட்டிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கடற்கரையிலும், தெருக்களிலும் சுற்றி வருவதாக புகார் கிளம்பியுள்ளது.

தெற்கு இங்கிலாந்தில் இருக்கும் போர்ன்மவுத் அதான் சுற்றிக்கும் கடற்கரை பகுதியில் நேற்று ஆயிரக் கணக்கான மக்கள் குவிந்துள்ளனர். தற்போது வரும் 4-ம் தேதி முதல் இங்கிலாந்து நாட்டில் ஊரடங்கு உத்தரவு தளர்வு செய்யப்பட உள்ளது. ஆனால், தளர்வு செய்யப்பட்டால் மேலும் கொரோனா அதிகரிக்கும் என அரசு அஞ்சுகிறது. இதற்கு முன்பே உலக சுகாதார அமைப்பு ஊரடங்கு உத்தரவு தளர்வு செய்ய கூடாது என எச்சரித்திருந்தது

இதனை தொடர்ந்து லண்டனில் நிருபர்களிடம் பேசிய பிரதமர் மோடி சாம்சங் கூறியது: ஜூலை 4-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு செய்யப்படுவதை மக்கள் நினைக்க வேண்டும். ஆனால், இந்த கொரோனாவை எதிர்த்து எடுக்கப்படும் நடவடிக்கைகளை பின்பற்றினால் வைரஸை வெல்ல முடியும்.

கொரோனா தொற்று எங்களுக்கு பரவாது என இளைஞர்கள் நினைத்துக் கொள்ளலாம். ஆனால், உங்களிடம் இருந்து பெரியவர்களுக்கு பரவும். கொரோனா இன்னும் ஓயவில்லை வெளியே தான் உள்ளது. இதனை மக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு போரிஸ் ஜான்சன் பேசியுள்ளார்.    

Similar News