17 பெண்கள் 7 சிறுவர்களை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுத்திய கிறிஸ்தவ பாதிரியார் கைது

Update: 2022-02-17 13:00 GMT

ஆந்திராவில் தேவாலயத்திற்குள் 17 பெண்கள், 7 சிறுவர்களை நான்கு ஆண்டுகளாக அடைத்து வைத்து பாலியல் சித்திரவதை செய்த கிறிஸ்துவ பாதிரியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பயோடேட்டாபில் என்ற இடத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 17 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக 42 வயது கிறிஸ்தவ மதபோதகர் அனில்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கிறிஸ்தவ பாதிரியார் பெண்கள் மற்றும் சிறுவர்களை தொழிலுக்கு கட்டாயப்படுத்துதல் மோசடி மற்றும் ஏமாற்றுதல் ஆகியவற்றில் ஈடுபடுத்தியுள்ளார். அதிலிருந்து பெண் ஒருவர் தப்பித்து காவல்துறை அதிகாரிகளை அணுகி புகார் அளித்த காரணத்தினால் இந்த சம்பவம் வெளிப்பட்டுள்ளது.

பாதிரியார் தன்னையும் மற்ற பெண்களையும் திருச்சபைக்கு அழைத்து வந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபடுத்துவதாகவும் வெளியில் கூற கூடாது என மிரட்டுவதாகவும் மேலும் ஏழை சிறுவர்கள் வலுக்கட்டாயமாக அங்கு தங்க வைத்து அடிமைகளாக வேலை செய்ய வைத்திருப்பதாகவகவும் புகார் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மற்ற பெண்களிடம் போலீசார் விசாரித்தபோது உண்மைகள் அம்பலமாகி வெளிச்சத்திற்கு வந்துள்ளன.


விசாரணையில் பாஸ்டர் அனில்குமார் கடவுள் பெயரில் பலரிடம் மோசடி செய்து பணம் சம்பாதித்தது வேலை வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் பணம் ஏமாற்றியதும், யூடியூப் சேனல் வைத்து கிறிஸ்துவ பிரார்த்தனைகளை நடத்தி பணம் சம்பாதிப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 4 பேர் பாதிரியார் அனில்குமார் உடன் சேர்த்து கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது அந்த திருச்சபையும் சீல் வைக்கப்பட்டுள்ளது.



Source - OpIndia

Similar News