அடுத்து 1771 புதிய பேருந்துகள் வாங்கும் போக்குவரத்துத்துறை - என்ன காரணம்?

அரசு போக்குவரத்து கழகத்திற்கு 1771 புதிய பேருந்துகள் வாங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

Update: 2022-10-11 06:30 GMT

தமிழகத்திற்கு புதிதாக 1,771 அரசு பேருந்துகளை வாங்க போக்குவரத்து துறை முடிவு செய்து அதற்கான ஒப்பந்த புள்ளியை வெளியிட்டுள்ளது. தமிழகத்திற்கு புதிய பேருந்துகளை வாங்குவது தொடர்பாக ஏற்கனவே அரசு அறிவித்தது.இதில் மின்சார பேருந்துகளும் அடங்கும். அதன்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பி.எஸ் 4 ரக பேருந்துகள் வாங்கப்பட உள்ளன. இந்த ரகத்தில் 1,771 பேருந்துகள் வாங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பேருந்துகள் அனைத்தும் அரசு போக்குவரத்து கழக மண்டலங்களுக்கு பிரித்து வழங்கப்பட உள்ளன.


அதன்படி சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 402, பேருந்துகளும் விழுப்புரம் மண்டலத்திற்கு 347, பேருந்துகளும் வழங்கப்பட உள்ளன. சேலம் மண்டலத்திற்கு 303 பேருந்துகளும், கோவை மண்டலத்திற்கு 115, பேருந்துகளும் கும்பகோணம் மண்டலத்திற்கு 303 பேருந்துகளும், மதுரை மண்டலத்திற்கு 251, பேருந்துகளும் நெல்லை மண்டலத்திற்கு 50 பேருந்துகளும் வழங்கப்படும். இந்த பேருந்துகளை வாங்குவதற்கான ஒப்பந்த புள்ளி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.





 


Similar News