1950 - 2015 இல் இந்தியாவில் சரிவை கண்டுள்ளது இந்து மக்கள் தொகை! வெளியான அறிக்கை..!

Update: 2024-05-10 03:37 GMT

1950 க்கும் 2015 ககும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் இந்துக்களின் மக்கள் தொகை 7.8% சரிந்ததாகவும், இஸ்லாமியர்களின் மக்கள் தொகை 43.15% உயர்ந்துள்ளதாகவும் அறிக்கை வெளியாகி உள்ளது. 

அதாவது, பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு மத சிறுபான்மையினரின் பங்கு - ஒரு குறுக்கு வெட்டு பகுப்பாய்வு (1950 - 2015) என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 1950 மற்றும் 2015 க்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் இந்து மக்கள் தொகையில் 7.82% குறைந்துள்ளது என்றும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கையானது 43.15% அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், 1950ல் கிறிஸ்தவர்களின் சதவீதம் 2.24 ஆக இருந்தது. ஆனால் 2015ல் 2.36 சதவீதமாக உயர்ந்துள்ளது. சீக்கியர்களின் சதவீதமானது 6.58% உயர்வையும், சமணர்கள் மற்றும் பார்சிகளின் மக்கள் தொகையும் 85 சதவீதம் சரிவையும் கண்டுள்ளது. அதுமட்டுமின்றி பெரும்பான்மையான மக்களின் விகிதம் சர்வதேச அளவில் குறைந்து வரும் போக்கு நிலவுவதாகவும் அதனை ஒட்டியே இந்தியாவிலும் பெரும்பான்மையான மக்களின் சதவிகிதம் 7.82 சதவிகிதமாக குறைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source : The Hindu Tamil thisai 

Similar News