20 தொகுதிகளில் பாஜக போட்டி! கூட்டணிக்கான தொகுதி பங்கீடுகள் நிறைவு! பரபர தேர்தல் களம்!

Update: 2024-03-21 09:18 GMT
20 தொகுதிகளில் பாஜக போட்டி! கூட்டணிக்கான தொகுதி பங்கீடுகள் நிறைவு! பரபர தேர்தல் களம்!

லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து ஓவ்வொரு கட்சியும் தனது கூட்டணி மற்றும் கூட்டணிக்கான தொகுதி பங்கீடுகளில் அறிவித்து வருகிறது அந்த வகையில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கான தொகுதி பங்கீடுகள் நேற்று பரபரப்பாக வெளியானது. 

அதன்படி பாமகவுக்கு 10 தொகுதிகளும், புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதியும் அமமுக கட்சிக்கு இரண்டு தொகுதியும் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 

இந்த தொகுதி பங்கீடு செய்வதன் ஆலோசனையை உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு செய்தது பாஜக, அந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மத்திய பொறுப்பாளர்கள் கிஷன் ரெட்டி மற்றும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதோடு இன்று தமாகா கட்சிக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கிடப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. 

 இந்த லோக்சபா தேர்தலில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார். 

Source : The Hindu Tamil thisai 

Similar News