புதிய தேசியக் கல்விக் கொள்கை 2020 - தேர்வுகளில் சீர்திருத்தம், பிராந்திய மொழிகளில் பாடம் கற்பது ஊக்குவிப்பு.! #NEP2020

புதிய தேசியக் கல்விக் கொள்கை 2020 - தேர்வுகளில் சீர்திருத்தம், பிராந்திய மொழிகளில் பாடம் கற்பது ஊக்குவிப்பு.! #NEP2020

Update: 2020-07-30 05:58 GMT

புதிய தேசிய கல்விக் கொள்கைகளுக்கு (NEP) மத்திய அமைச்சரவை ஓப்புதல் அளித்தநிலையில், கடந்த புதன்கிழமை (29 ஜூலை) அன்று இந்தியக் கல்வித் துறை பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, பொதுத் தேர்வின் முக்கியத்துவம் குறைக்கப்படும் மற்றும் அது ஒரு குறிப்பிட்ட கல்வியாண்டில் பல முறை நடத்தப்படலாம் என்று கல்வித்துறை செயலாளர் அனிதா கார்வால் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கணித பாடத்தில் அறிமுகப்படுத்தியதை போன்று, மாணவர்களுக்கு எளிய வகையில் தேர்வுத்தாள்கள் தேர்ந்தெடுக்கும் வசதியும் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறியுள்ளார். .

மேலும் பொதுத் தேர்வானது அகமதிப்பீடு மற்றும் புறமதிப்பீடு வகையிலிருக்கும் என்றும் மாணவர்களின் அறிவுத்திறனைச் சோதிக்கும் வகையிலும் மேம்படுத்தும் வகையிலும் இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். இது மனப்பாடம் செய்வதைப் பெருமளவு குறைக்கும்.

மேலும் அவர், பள்ளிகளில் தாய்மொழி கல்வி குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு வரையும் அதிகபட்சம் எட்டாம் வகுப்பு வரை செயல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். மற்றும் ஆறாம் வகுப்பு முதலே மாணவர்களுக்குக் குறியீடு(coding ) கற்றுத்தரப்படுமென்றும், தற்போதிருக்கும் நிலையைத் தவிர்த்து தொழிற்கல்வி ஆறாம் வகுப்பு முதலே அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

புதிய தேசிய மதிப்பீடு முறையானது PARAKH என்று கூறப்படுகிறது. அது செயல்திறன்,மதிப்பீடு,பகுத்தாய்வு மற்றும் மறு ஆய்வு என முழு வளர்ச்சிக்கு உதவும் வகையிலிருக்கும். அனைத்து கல்வி முறைகளிலும் இம்முறை செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர். இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட அடிப்படைத் தகுதியை பள்ளிகள் கொண்டிருப்பதை நாம் உறுதிப்படுத்த முடியும். 

source: https://swarajyamag.com/insta/major-reforms-in-school-board-exams-announced-in-nep-regional-medium-of-instruction-gets-encouraged

Similar News