இந்தியா - ரஷ்யா - சீனா ஆகிய மூன்று நாடுகளும் ஜூன் 22ஆம் தேதி முத்தரப்பு பேச்சு.!

இந்தியா - ரஷ்யா - சீனா ஆகிய மூன்று நாடுகளும் ஜூன் 22ஆம் தேதி முத்தரப்பு பேச்சு.!

Update: 2020-06-15 07:23 GMT

இந்தியா-ரஷ்யா-சீனா ஆகிய மூன்று நாடுகளும் வரும் ஜூன் 22-ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தையை இணையதளம் மூலம் நடைபெற உள்ளது.

இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்திய-சீனா எல்லை பகுதியில் எற்படும் பிரச்சினையை பற்றி சீனா வெளியுறவு துறை அமைச்சர் வாங்-யீயுடன் பேச்சுவார்த்தை நடந்த இருக்கிறார். ஆனால் பான்காங் பகுதியில் உள்ள இந்தியா ராணுவத்தின் ரோந்துப் பணியை தடுக்கும் விதமாக தடுப்புகளை அமைத்து இருக்கும் சீனா படைகள் பின்வாங்காமல் இருந்தால் இந்த பேச்சுவார்த்தைக்கு வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்ளமாட்டார் என கூறப்படுகிறது.

கடந்த மே மாதம் 5ஆம் தேதி இந்தியா-சீனா எல்லை பகுதியில் இரு படைகளுக்கும் இடையே மோதல் உருவானது. பின்னர், இந்திய வெளியுறவு துறை செயலாளர் சீனா நாட்டின் தூதரை தொடர்பு கொண்டு கடும் கண்டனம் விடுத்தது ச்சரிக்கை விடுத்துள்ளார். இதனை அடுத்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இந்தியாவின் கடும் எதிர்ப்பை சீனாவிற்கு தெரிவித்தார்.

மேலும், இதன் பின்னர் இருநாட்டு ராணுவ உயரதிகாரிகளின் பேச்சுவார்த்தை மூலம் சிறிய அளவில் சீனா படைகள் பின்வாங்கியது. 

Similar News