கொரோனா பாதிப்பால் பலியான 28 களப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரண உதவி.!

கொரோனா பாதிப்பால் பலியான 28 களப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரண உதவி.!

Update: 2020-08-06 05:49 GMT

கொரோனா பாதிப்பால் பலியான 28 களப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 25 லட்சம் நிவாரண நிதி கொடுப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. இந்த கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆகிய முன் களப் பணியாளர்கள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியாகி வருகின்றனர்.

தற்போது தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வெளியிட்ட அறிக்கையில்; கொரோனா வைரஸை எதிர்த்துப் முன் களப்பணியாளர்கள் வேலை செய்யும் சமயத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 28 அரசு ஊழியர்கள் உயிரிழந்தனர்.

இந்த இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த நிவாரணத் நிதியான தலா ரூபாய் 25 லட்சம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.   

Similar News