3 மடங்கு நிதி ஒதுக்கீடு - அதிகரிக்கும் எல்லைச் சாலைப் பணிகள் - மோடி அரசு செய்தது என்ன?

3 மடங்கு நிதி ஒதுக்கீடு - அதிகரிக்கும் எல்லைச் சாலைப் பணிகள் - மோடி அரசு செய்தது என்ன?

Update: 2020-07-06 12:23 GMT

படைகளையும் ராணுவ தளவாடங்களையும் எளிதில் எல்லைக்கு நகர்த்துவதற்கு அவசியமான சீனாவை ஒட்டிய எல்லைப் பகுதி சாலைகளுக்கான நிதி கடந்த நான்கு ஆண்டுகளில் மும்மடங்கு அதிகரித்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

2008ல் செலவழக்கப்பட்ட 3,300 கோடியில் இருந்து வெறும் 1,300 கோடி மட்டுமே அதிகரிக்கப்பட்டு 2016ல் 4,600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே கடந்த நான்கு ஆண்டுகளில் 2016லிருந்து 2020-21 வரையிலான கால கட்டத்தில் 4,600 கோடியில் இருந்து 11,800 கோடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

எல்லைப் பகுதிகளை ஒட்டிய சாலைப் பணிகளின் வேகமும் 2017-20 இடையே அதிகரித்துள்ளது. 2016ல் 230கிமீ என்ற அளவில் மட்டுமே இருந்த ஃபார்மேஷன் கட்டிங் எனப்படும் சாலை அமைப்பதற்கான அடிப்படைப் பணி தற்போது ஒரு வருடத்திற்கு 430கிமீ தொலைவுக்கு அதிகரித்துள்ளது.

சர்ஃபேசிங் எனப்படும் தார் ஊற்றும் பணி கடந்த காலங்களில் ஒரு ஆண்டில் 170கிமீ தூரத்திற்கு மட்டுமே நடந்து வந்த நிலையில் தற்போது ஒரு வருடத்திற்கு 380கிமீ தொலைவுக்கு நடக்கும் வகையில் அதிகரித்துள்ளது.

2008-14ம் ஆண்டு வரையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் எல்லை சாலைகள் அமைக்கும் பணி 3,610கிமீ தொலைவுக்கு மட்டுமே நடந்த நிலையில் தற்போதுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் கீழ் 4,764கிமீ தொலைவுக்கு எல்லைப் பகுதியில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த முன்னேற்றங்களுக்கு எல்லைச் சாலைகள் அமைப்பில் (BRO) கடந்த சில வருடங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட மாற்றங்களே காரணம் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். முதலில், முன்னர் எல்லைச் சாலைகள் அமைப்பின் பணிகளை பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவு செய்த போதும் அதற்கான நிதிக்கு சாலைப் போக்குவரத்துத் துறையிடமே செல்ல வேண்டியதாக இருந்தது. இந்த இரு துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் நிர்பந்தம் இல்லை சாலைகள் அமைப்பின் செயல்பாட்டுக்கு முட்டுக்கட்டையாக இருந்தது. தற்போது இந்த அமைப்பு பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

இரண்டாவதாக, 2017ல் சீனாவுடன் டோக்லமில் ஏற்பட்ட மோதல்‌ முடிவுக்கு வந்த அன்று, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து 100கிமீ தொலைவுக்குள் செயல்படுத்தப்படும் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு வனத்துறையின் அனுமதி தேவையில்லை என்ற அறிவிப்பை மோடி அரசு வெளியிட்டது.

இதேபோல் 2014ல் ஆட்சிக்கு வந்ததுமே ஒரு பொது அறிவிப்பை மோடி அரசு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. வன மற்றும் சுற்றுச்சூழல் துறை‌ அனுமதிக்காக காத்திருப்பதால் சாலைத் திட்டங்களில் ஆண்டுக்கணக்கில் தாமதம் ஏற்படுவது அனைவருக்கும் தெரிந்ததே.

மூன்றாவதாக, கடந்த 2017ல் டோக்லம் பிரச்சினை நடந்து கொண்டிருந்த போதே எல்லைச் சாலைகள் அமைப்பு அதிகாரிகளின் பொது நிர்வாக மற்றும் நிதி நிர்வாக அதிகாரங்களை பத்து மடங்கு, சில பதவிகளுக்கு பதினைந்து மடங்கு கூட அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டது.

நன்றி : ஸ்வராஜ்யா

Similar News