இந்தியாவுக்கு அடித்தது அதிர்ஷ்டம் : தங்க மலையே கையில்.. இந்தியாவின் மொத்த கையிருப்புத் தங்கத்தின் அளவை விட ஐந்து மடங்கு அதிகம்!

இந்தியாவுக்கு அடித்தது அதிர்ஷ்டம் : தங்க மலையே கையில்.. இந்தியாவின் மொத்த கையிருப்புத் தங்கத்தின் அளவை விட ஐந்து மடங்கு அதிகம்!

Update: 2020-02-22 07:06 GMT

உத்தரப்பிரதேசத்தின் இரு இடங்களில் 3,350 டன் தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் கையிருப்புத் தங்கத்தின் அளவை விட 5 மடங்கு அதிகமாகும். உலக தங்க கவுன்சிலின் கூற்றுப்படி, இந்தியாவின் தற்போதைய தங்க இருப்பு 626 டன். புதிய தங்க இருப்புக்கள் கிட்டத்தட்ட ரூ .12 லட்சம் கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சுமார் 20 ஆண்டுகள் சந்தேகத்தையடுத்து மத்திய மற்றும் மாநில சுரங்கத்துறை இயக்குநரகம் இணைந்து நடத்திய ஆய்வின் முடிவில் சோன்பத்ரா மற்றும் ஹர்தி ஆகிய இடங்களில் தங்கச் சுரங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் சோன்பத்ராவில் 2,700 டன் மற்றும் ஹர்தியில் 650 டன் என மொத்தம் 3,350 டன் தங்கம் இருக்க வாய்ப்புள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இது நாட்டின் மொத்த கையிருப்புத் தங்கத்தின் அளவை விட 5 மடங்கு அதிகமாகும்.இந்த சுரங்கத்தை ஏலம் விட அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 7 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டு இணைய வழி ஏல நடவடிக்கைகளை கவனிக்க உள்ளனர். அதுமட்டுமின்றி யுரேனியம் போன்ற அரிய தாதுக்கள் உள்ளன.

சோன்பத்ரா பிராந்தியத்தில் தங்க படிமங்களை கண்டறியும் செயல்முறையை முதன்முதலில் பிரிட்டிஷ் ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. நக்சலிசத்தால் பாதிக்கப்பட்ட பகுதி என்பதால் சோன்பத்ரா மாவட்டம் அவ்வப்போது செய்திகளில் வருவது வழக்கம்.

இதில் மற்றுமொரு சுவாரஸ்யம் என்னவென்றால் உத்தரபிரதேசத்தின் இரண்டாவது பெரிய மாவட்டமாக உள்ள சோன்பத்ரா, மேற்கில் மத்தியப் பிரதேசம், தெற்கே சத்தீஸ்கர், தென்கிழக்கில் ஜார்கண்ட் , கிழக்கில் பீகார் ஆகிய நான்கு மாநிலங்களுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது.

உலக தங்கக் கூட்டமைப்பின் படி இந்தியாவிடம் தற்போது 626 டன் தங்கம் கையிருப்பு உள்ளது. இது உலகளவு தங்கத்தின் அளவில் 6.6 சதவீதமாகும். அதிகபட்சமாக அமெரிக்காவிடம் 8,133.5 டன் தங்கம் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் ஜெர்மனியிடம் 3,366 டன், இத்தாலியிடம் 2,451.8 டன், பிரான்ஸிடம் 2,436 டன், ரஷியாவிடம் 2,241.9 டன், சீனாவிடம் 1,948.3 டன், சுவிட்ஸர்லாந்திடம் 1,040 டன் மற்றும் ஜப்பானிடம் 765.2 தங்கம் கையிருப்பு உள்ளது.

Similar News