கங்கையை தூய்மைப்படுத்த - 30 ஆயிரம் கோடி ஒதுக்கிய மத்திய அரசு

கங்கை மற்றும் அதன் துணை நதியை தூய்மைப்படுத்த ரூபாய் 30,000 கோடி நிதி ஒதுக்கீடு -மத்திய நீர்வளத்துறை அமைச்சர் தகவல்

Update: 2022-08-17 14:30 GMT

கங்கை மற்றும் அதன் துணை நதிகளை தூய்மைப்படுத்தும் திட்டங்களுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இந்திய மக்கள் தொகை, புவியியல் தன்மை, நீர்வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் சவால்களை கருத்தில் கொண்டு நீர் மற்றும் பிற இயற்கை வளங்களின் நிலையான பயன்பாட்டை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்று கூறினார்.

மேலும் கங்கையை சுத்தப்படுத்த ஏராளமான உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Similar News