அயோத்தி ராமர் கோவில் கருவறைக்கு 33 1/5 கிலோ எடையில் வெள்ளியில் செங்கல்.! #Rammandhir #Ayodhi #PMModi

அயோத்தி ராமர் கோவில் கருவறைக்கு 33 1/5 கிலோ எடையில் வெள்ளியில் செங்கல்.! #Rammandhir #Ayodhi #PMModi

Update: 2020-07-22 02:40 GMT

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 5-ந் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். அடிக்கல் நாட்டு விழாவின் போது கருவறை அமையும் இடத்தில் வெள்ளியால் ஆன 5 செங்கல்கள் பதிக்கப்படும் என்றும் 40 கிலோ எடையுள்ள வெள்ளியால் ஆன பிரம்மாண்ட அடிக்கல் நாட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை யின் தலைவர் மகந்த் நிருத்ய கோபால்தாஸ் வெள்ளி செங்கல் ஒன்றை நன்கொடையாக வழங்கினார். இந்த நிலையில் இந்திய தங்க சங்கம் சார்பில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவுக்காக 33 கிலோ 664 கிராம் எடையில் வெள்ளி செங்கல் நன்கொடையாக வழங்கப்பட்டு உள்ளது. இந்திய தங்க சங்கத்தின் தலைவர் அனுராக் ரஸ்தோகி இந்த வெள்ளி செங்கலை கோவில் கட்டுமான பணிகளை கவனிக்கும் அறக்கட்டளையின் உறுப்பினரான அனில் மிஸ்ராவிடம் வழங்கினார்.

Similar News