35 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராமர் கோவிலுக்கு நன்கொடை- அதிர்ச்சியில் பெரியார் பேரன்கள்.!

தி.மு.கவின் இந்து விரோத பிம்பத்தை மாற்றுவதற்காக இது போன்ற பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது என்றும் ஆட்சிக்கு வந்துவிட்டால் அவர்கள் மீண்டும் இந்து எதிர்ப்பைத் தொடங்கிவிடுவார்கள் என்று நெட்டிசன்கள் பதிவு செய்துள்ளனர்.

Update: 2021-02-18 19:46 GMT

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக தி.மு.க எம்.எல்.ஏக்கள் 35 பேர் இதுவரை நன்கொடை வழங்கியுள்ளனர் என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக விஷ்வ ஹிந்து பரிசத் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் நாடு முழுவதும் உள்ள மக்களிடம் நிதி வசூல் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தமிழகத்திலிருந்து மட்டும் தற்போது வரை ₹67 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. ₹100 கோடி ரூபாயை எட்டுவதற்கு இன்னும் ₹33 கோடி தேவைப்படுகிறது. 

 

நாடு முழுவதும் ராமர் கோவில் கட்டுவதற்காக தற்போது வரை ₹1,511 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆச்சரியப்படும் விதமாக மக்களிடம் இந்து எதிர்ப்பு கட்சி என்று பெயர் பெற்ற திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த 35 எம்எல்ஏக்கள் ராமர் கோவில் கட்டுவதற்காக நிதி அளித்துள்ளனர். இது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

2021ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகளை அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்டன. தி.மு.கவின் இந்து விரோத பிம்பத்தை மாற்றுவதற்காக இது போன்ற பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது என்றும் ஆட்சிக்கு வந்துவிட்டால் அவர்கள் மீண்டும் இந்து எதிர்ப்பைத் தொடங்கிவிடுவார்கள் என்று நெட்டிசன்கள் பதிவு செய்துள்ளனர்.
 

கலைஞர் இருந்தவரை தி.மு.கவில் இருக்கும் உறுப்பினர்கள் தங்களது இந்து மத உணர்வுகளையும் அடையாளங்களையும் வெளிக்காட்டாமல் இருந்து வந்தனர். ஆனால் தற்போது ஸ்டாலின் தலைமை ஏற்ற பின்னர் தங்களது இந்து மத உணர்வுகளை வெளிப்படையாகவே வெளிப்படுத்தி வருகின்றனர்.

 

சில நாட்களுக்கு முன்னர் தி.மு.க. தலைவர் ஸ்டாலினும் அவரது மகன் உதயநிதியும் வேலேந்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தினர். தற்போது தி.மு.க எம்.எல்.ஏக்கள் ராமர் கோவிலுக்கு நிதி அளித்து வருவதும் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் தான் இருக்குமோ என்று மக்கள் சந்தேகம் கொள்கின்றனர்.

Similar News