மகிழ்ச்சியான செய்தி - தமிழகத்தில் கொரோனாவிலிருந்து மீண்டு இதுவரை 365 பேர் வீடு திரும்பியுள்ளனர்.!

மகிழ்ச்சியான செய்தி - தமிழகத்தில் கொரோனாவிலிருந்து மீண்டு இதுவரை 365 பேர் வீடு திரும்பியுள்ளனர்.!

Update: 2020-04-18 15:42 GMT

சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் இதுவரை 35035 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது, கடந்த ஒரு நாளில் 5363 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 49 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1372 ஆக உயர்ந்துள்ளது. இதில் 4 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளனர். கடந்த 2 நாட்களாக உயிரிழப்பு இல்லாததால் பலி எண்ணிக்கை 15 ஆக உள்ளது என தெரிவித்தார்.

இன்று மட்டும் 82 பேர் கொரோனா இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளதாகவும், தமிழகத்தில் இதுவரை மொத்தம் 365 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர், ஐ சி எம் ஆர் இடம் இன்று மேலும் மூன்று பரிசோதனை மையத்திற்கு அனுமதி பெற்றுள்ளதாகவும் ஆகையால் அரசிடம் 21 பரிசோதனை மையம் தனியாரிடம் 10 பரிசோதனை மையம் செயல்படத் தொடங்கி விட்டதாகவும், இந்தியாவிலேயே அதிகப்படியாக பரிசோதனை மையம் தமிழகத்தில் தான் உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

தமிழகத்தில் அதிகமானோரை குணப்படுத்தி வீட்டுக்கு அனுப்புவதில் முதன்மை மாநிலமாக இந்திய அளவில் தமிழகம் திகழ்வதாகவும், இறப்பு வீதம் கூட 1.1% ஆகவே உள்ளது எனக் குறிப்பிட்டார்.

Similar News