தமிழகத்தில் 39 குவாரிகள் செயல்பட அனுமதி - பின்னணி என்ன?

தமிழகத்தில் 39 குவாரிகள் செயல்பட அனுமதி கிடைத்துள்ளது.

Update: 2022-10-05 12:46 GMT

தமிழகத்தில் 39 குவாரிகள் செயல்பட அனுமதி கிடைத்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அடைமிதிப்பான் குளத்தில் உள்ள தனியார் குவாரியில் கடந்த மே 14ம் தேதி ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் பலியாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் பிறகு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள் செயல்பட தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில் இதன் உரிமையாளர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளை முறையீடு செய்திருந்தனர். அந்த முறையீட்டில் குவாரிகளை செயல்பட அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தனர்.

இந்த முறையீட்டின் அடிப்படையில் 55 குவாரிகளில் மிக அதிக விதிமுறை மீறல்கள் உள்ள 16 குவாரிகளை தவிர மீதம் 39 குவாரிகளில் இருந்து கல், சல்லி, எம்.சாண்ட் உள்ளிட்டவை எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 39 குவாரிகள் செயல்பட துவங்கின.



Source - Dinamalar

Similar News