அயோத்தி : ஆகஸ்ட் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் வீட்டில் விளக்கேற்றுமாறு யோகி ஆதித்யநாத் வலியுறுத்தல் ...!

அயோத்தி : ஆகஸ்ட் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் வீட்டில் விளக்கேற்றுமாறு யோகி ஆதித்யநாத் வலியுறுத்தல் ...!

Update: 2020-08-04 10:10 GMT

வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வான ராமர் கோவிலின் பூமி பூஜை ஆகஸ்ட் 5 இல் நடக்கவுள்ள நிலையில், அதன் நிகழ்வுகள் அனைத்தையும் கவனித்து வரும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகஸ்ட் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் நாட்டு மக்களை தங்கள் வீட்டில் விளக்கேற்றி வைக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

விழாவிற்கு முன்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த யோகி ஆதித்யநாத், அனைவரும் தங்கள் இல்லங்களில் ஆகஸ்ட் 4 மற்றும் 5 தேதிகளில் விளக்குயேற்றுமாறும், மத தலைவர்கள் கோவில்களை அலங்கரித்து, விளக்கால் அலங்கரித்து "ராமாயண உரை " கோவில்களில் நடத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

நிகழ்வில் எந்தவொரு குறைபாடு ஏற்படாத வகையில் நாங்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவருகிறோம் என்று உத்தர பிரதேஷ் முதல்வர் கூறியுள்ளார். COVID-19 கருத்தில் கொண்டு, அனைத்து கட்டுப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. விழாவிற்கு வரவேற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவர். வரவிரும்பும் அனைத்து பக்தர்கள் சார்பில் மோடி கலந்து கொள்வார் என்று கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று நோய் மத்தியில் நகரமுழுவதும் பல கட்டுப்பாடுகளுடன் இயங்கிவருகிறது. விழா நடைபெறும் இடத்தையடைய பிரதமர் மோடி 3km சாலையைக் கடந்து வரவேண்டும், அச்சாலை முழுவதும் மஞ்சள் நிறத்தால் அலங்கரிக்கப்பட்டும். அச்சாலை முழுவதும் ராமாயண கதை காட்சிகள் கொண்ட புகைப்படங்கள் அமைக்கப்படும்.

பூமி பூஜை விழாவிற்கு சுமார் 1 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.

ஆகஸ்ட் 5 புனித நகரமான அயோத்தியில் நடைபெறும் பூமி பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.



source: https://www.opindia.com/2020/08/ram-mandir-bhoomi-pujan-deepotsav-akhand-ramayan-path-diyas/

Similar News