அத்திவரதரை தரிசிக்கச் சென்ற பக்தர்கள் 4 பேர் பலி! செயலிழந்த மாவட்ட நிர்வாகம் !!

அத்திவரதரை தரிசிக்கச் சென்ற பக்தர்கள் 4 பேர் பலி! செயலிழந்த மாவட்ட நிர்வாகம் !!

Update: 2019-07-18 13:42 GMT


காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில், அத்திவரதர் கடந்த 1-ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். அத்திவரதர் தினமும் ஒரு பட்டாடையில் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி அளித்தார். அத்திவரதரை தரிசிக்க அதிகாலையிலேயே பக்தர்கள் குவிந்து வருகின்றனர். 


இன்று காலை முதல் அத்திவரதரை தரிசிக்க அதிகளவில் பக்தர்கள் திரண்டனர். இன்று ஒரே நாளில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசிப்பார்கள் என்று கோயில் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. 


அத்திவரதரை பார்ப்பதற்காக ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் சிலர் மூச்சுத்திணரலால் மயங்கி விழுந்தனர். 


இதில் 65 வயது மற்றும் 50 வயது மதிக்கத்தக்க 2 பெண்கள் அந்த இடத்திலேயே உயரிழந்தனர். மேலும் 2 ஆண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இன்று 2 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று முன்னரே தெரிந்திருந்தும் எந்தவித கூடுதல் ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்யவில்லை. அதிகாரிகள், எவ்வளவு வசூல் என்பதில் மட்டுமே குறியாக உள்ளனர்.


இனிமேலாவது, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செய்வார்களா?


Similar News