45 ஆயிரம் கோடி மதிப்புள்ள பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் - ராணுவ அமைச்சகம் ஒப்புதல்

45 ஆயிரம் கோடி மதிப்புள்ள ராணுவ தளவாடங்கள் கொள்முதல் செய்ய ராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

Update: 2023-09-16 06:45 GMT

ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் பாதுகாப்பு தளவாட கொள்முதல் கவுன்சில் கூட்டம் நடந்தது. அதில் 45 ஆயிரம் கோடி மதிப்புள்ள பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. இவை அனைத்தும் முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்படும் தளவாடங்கள் ஆகும். இந்திய வர்த்தகர்களிடம் இருந்து இவை வாங்கப்படுகின்றன. இம்முடிவு இந்திய பாதுகாப்பு தளவாட உற்பத்திக்கு ஊக்கம் அளிக்கும் என்றும் தற்சார்பு இந்தியா என்ற இலக்கை எட்ட உதவும் என்றும் ராணுவ அமைச்சகம் கூறியுள்ளது.


கொள்முதல் செய்யப்படும் பாதுகாப்பு தளவாடங்களில் துருவஸ்திரம் என்ற குறுகிய தூரம் பாய்ந்து செல்லும் ஏவுகணைகளும் அடங்கும் . இந்த ஏவுகணை வானில் இருந்து தரையில் உள்ள இலக்கை தாக்க வல்லது. எம்.ஹச் 4 ரக ஹெலிகாப்டர்களில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்படும் . விமானங்களும் வாங்கப்படுகின்றன. பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து இந்த விமானங்கள் கொள்முதல் செய்யப்படும். இலகு ரக கவச வாகனங்கள் ஒருங்கிணைந்த கண்காணிப்பு சாதனங்கள் சிறிய பீரங்கிகள் ரேடர்கள் ஆகியவையும் கொள்முதல் செய்யப்படுகின்றன. நாட்டின் பாதுகாப்புக்கும் இந்திய படைகளின் தாக்குதல் திறனை அதிகரிக்கவும் இந்த தடவாளங்கள் உதவும் என்று ராணுவ அமைச்சகம் கூறியுள்ளது.


SOURCE :DAILY THANTHI

Similar News