500க்கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்கம், இருவர் கைது - கருப்பர் கூட்டத்தின் மீது தொடரும் நடவடிக்கை.!

500க்கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்கம், இருவர் கைது - கருப்பர் கூட்டத்தின் மீது தொடரும் நடவடிக்கை.!

Update: 2020-07-21 07:26 GMT

ராமர், சீதா, சரஸ்வதி ஆகிய இந்துக் கடவுள்களைப் பற்றிய புராணங்களையும் இதிகாசங்களையும் இழிவுபடுத்தி பல வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். அதே போன்று கந்தசஷ்டி கவசத்தைப் பற்றியும் ஆபாசமாகப் பேசிய வீடியோவைப் பற்றி கதிர் செய்திகள் யூட்யூப் சேனலில் முதன்முதலில் செய்தி வெளியான பிறகு இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து தமிழகம் முழுவதிலும் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின.

பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டதுடன் புகார்களும் பதிவு செய்யப்பட்டன. இதன் அடிப்படையில் கருப்பர் கூட்டம் யூட்யூப் சேனல் நிர்வாகி செந்தில் வாசன் என்பவரும் புதுச்சேரிக்கு தப்பிச் சென்று தலைமறைவாகி பின்னர் சரணடைந்த தொகுப்பாளர் சுரேந்தர் நடராஜன் என்பவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கருப்பர் கூட்டம் சேனல் இயங்கி வந்த கட்டடமும் சீல் வைக்கப்பட்டது. நேற்று கருப்பர் கூட்டம் சேனலை முடக்கக் கோரி யூட்யூப் நிறுவனத்துக்கு சைபர் கிரைம் போலீசார் மின்னஞ்சல் அனுப்பியதாக செய்தி வெளியான நிலையில் தற்போது அந்த சேனலில் பதிவிடப்பட்டு இருந்த சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கொண்ட 500க்கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், கந்தசஷ்டி கவசம் பற்றிய வீடியோவை நீக்கி விட்டதாக சுரேந்தர் காவல்துறையினரிடம் கூறியதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில் பரபரப்பு அடங்கிய பின்னர் மீண்டும் அந்த வீடியோவைப் பரப்பும் நோக்கத்துடன் அட்மின் மட்டுமே பார்க்கும் வண்ணம் அந்தரங்கமாக வைத்திருப்பது தெரிய வந்ததால் இதன் உள்நோக்கத்தைப் பற்றி காவல்துறையினர் விசாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த குறிப்பிட்ட வீடியோவை மாம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து பதிவேற்றம் செய்த சோமசுந்தரம் மற்றும் மறைமலை நகரைச் சேர்ந்த குகன் ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Image Credits : Polimer News

Similar News