₹ 50,000 கோடியில் ‌‌‌புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டம் - மத்திய அரசு அறிவிப்பு!

₹ 50,000 கோடியில் ‌‌‌புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டம் - மத்திய அரசு அறிவிப்பு!

Update: 2020-06-18 12:41 GMT

கொரோனா தொற்று மற்றும் அதன் பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர் களுக்கு உதவும் விதமாக மத்திய அரசு பல திட்டங்களையும் சலுகைகளையும் அறிமுகப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று கரீப் கல்யாண் ரோஜ்கர்‌ யோஜனா‌ என்ற திட்டம் வரும் 20ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தொடங்கி வைக்கப்படும் என்று இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சற்றுமுன் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அளித்த தகவலின் படி ₹ 50,000 கோடி மதிப்புள்ள இந்த திட்டம் பீகாரில் உள்ள ககாரியா மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்படும் என்று தெரியவந்துள்ளது. அவர் மேலும் கூறுகையில் 6 மாநிலங்களில் உள்ள 116 மாவட்டங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர் என்றும், வேலை இழந்து நிர்கதியாக நிற்கும் அவர்களுக்கு உதவும் வண்ணம் வேலைவாய்ப்பு மற்றும் உட்கட்டமைப்பை மேம்படுத்த உதவுமாறு இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

பிரதம மந்திரி ஆவாஸ், யோஜனா பிரதம மந்திரி கிராம் சதக் யோஜனா, ஜல் ஜீவன், தேசிய நெடுஞ்சாலை பணிகள், கிணறு தோண்டுதல்ஃ அங்கன்வாடி மைய பணிகள், ரயில்வே பணிகள் ஆகிய ஏற்கனவே உள்ள திட்டங்களின் கீழ் வரும் 25 வகையான பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க இத்திட்டத்தின் மூலம் வழிவகை செய்யப்படும் என்றும் நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் இந்த பணிகள் 125 நாட்களில் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Similar News