இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய ஹை கமிஷனிலிருந்து 55 ஊழியர்களை அடுத்த ஏழு நாட்களில் இந்தியா திரும்ப பெறுகிறது.!

இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய ஹை கமிஷனிலிருந்து 55 ஊழியர்களை அடுத்த ஏழு நாட்களில் இந்தியா திரும்ப பெறுகிறது.!

Update: 2020-06-26 02:09 GMT

இந்திய அரசு இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய ஹை கமிஷனில் பணிபுரியும் 55 அதிகாரிகளை திரும்ப பெற முடிவு செய்துள்ளது. இரு நாடுகளும் பரஸ்பரம் முடிவு செய்து ஊழியர்களின் எண்ணிக்கையை 50% குறைப்பது என்று ஒப்புக்கொண்டுள்ளன. பாகிஸ்தானும் புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் ஹை கமிஷனிலிருந்து 50% ஊழியர்களை திரும்ப பெறும்.

இந்தியா கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, புதுடில்லியிலுள்ள பாகிஸ்தான் ஹை கமிஷன் ஊழியர்களும் பாதியாக குறைக்க படுவார்கள் என்று அறிவித்தது. இஸ்லாமாபாத்தில் நடைபெறும் விரும்பத்தகாத சம்பவங்களால் பாகிஸ்தானுடனான உறவை இந்தியா குறைத்துக்கொள்ள எண்ணுகிறது.

பாகிஸ்தானில் உள்ள இந்திய அதிகாரிகள் துன்புறுத்தப்பட்டார்கள் என்னும் அதிர்ச்சிகரமான செய்தி ஜூன் 16-ஆம் தேதி வெளிச்சத்திற்கு வந்ததே இந்திய ஹை கமிஷனில் இருந்து ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் முடிவானது எடுக்கப்பட காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த முடிவானது, பாகிஸ்தானில் உள்ள இந்திய அதிகாரிகள் மோசமாக நடத்தப்பட்டதால் எடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பாதுகாப்பு அமைப்பு இந்திய அதிகாரிகளை கடத்தி, அவர்களை சித்திரவதை செய்துள்ளது. மேலும் சாலை விபத்து ஏற்படுத்தியதாகவும், கள்ள நோட்டு வைத்திருந்ததாகவும் அவர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது.

மற்றொரு சம்பவத்தில்,புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் ஹை கமிஷனில் வேலை பார்க்கும் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இந்தியாவை உளவு பார்த்ததாக இந்தியாவிற்கு தெரியவந்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, இந்திய வெளியுறவு விவகாரத்துறை அமைச்சகம் இந்தியாவின் பாகிஸ்தான் தூதரக பொறுப்பாளர் சையத் ஹைதர் சாவை அழைத்து அவர்களின் தூதரக அதிகாரிகள் உளவு பார்த்த செயல் மற்றும் தீவிரவாத அமைப்புகள் உடனான தொடர்பை கூறி அவரை எச்சரித்தது.

இந்திய ஹை கமிஷன் ஊழியர்களை கடத்தி சித்திரவதை

இரண்டு இந்திய ஹை கமிஷன் ஊழியர்கள் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ ஆல் கடத்தப்பட்டு கடந்த திங்கள்கிழமை விடுவிக்கப்பட்டனர். அவர்கள் விபத்து ஏற்படுத்தியதாக ஒப்புக் கொள்ளுமாறு சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். இந்திய ஹை கமிஷனில் ஓட்டுநர்களாக பணி புரிந்த இந்த இரண்டு இந்திய ஊழியர்களும் காலை 8:30-8:45 வாக்கில் இந்திய ஹை கமிஷன் அலுவலகத்திற்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இருந்து 15 முதல் 16 ஆயுதமேந்திய வீரர்களால் அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஐஎஸ்ஐ அதிகாரிகள் இரண்டு இந்திய ஊழியர்களையும் சாக்குத் துணியால் முகத்தை மூடி தெரியாத ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அந்த இரண்டு ஊழியர்களையும் விபத்து ஏற்படுத்தியதாக ஒப்புக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி அதை வீடியோவாக எடுத்துள்ளனர்.

பாகிஸ்தானின் ஆயுதமேந்திய வீரர்கள் இந்திய ஹை கமிஷனில் இருக்கும் உளவுத்துறை அதிகாரிகள் தான் இந்திய ஊழியர்களை வெளியிலிருந்து மக்களை ஹை கமிஷன் உள்ளே சந்திப்பதற்கு தங்கள் காரில் அழைத்து வருமாறு உத்தரவிட்டதாக ஒப்புக் கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளனர். அந்த இரண்டு அதிகாரிகளும் கம்பியாலும் மரக்கட்டையாலும் தாக்கப்பட்டுள்ளனர். மேலும் சுத்தமற்ற குடிநீரை குடிக்குமாறும் வற்புறுத்தப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வுகளின் பின்னணியில் தான் இந்திய அரசு தூதரகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது 

Similar News