57 ஆண்டுகளுக்கு பிறகு சிலிண்டர் இணைப்பு கிடைத்ததை கொண்டாடும் மக்கள் - மோடி அரசின் அசாத்திய பாய்ச்சல்

Update: 2022-09-28 12:33 GMT

21ம் நூற்றாண்டில் பெரும்பான்மையான இடங்களில் நவீன தொழில்நுட்பங்கள் கிடைக்கின்றன. ஆனால், தற்போது வரை சில இடங்களில் இன்னும் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் உள்ளன. இந்தியாவில் முதல் எல்.பி.ஜி. சிலிண்டர் இணைப்பு 1965-ம் ஆண்டு அக்டோபர் 22ம் தேதி மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் தொடங்கப்பட்டது. இந்தியாவில் எல்.பி.ஜி அறிமுகப்படுத்தப்பட்டு 57 ஆண்டுகள் ஆன நிலையில், இந்தியாவின் சில இடங்களில் இன்னுமும் எல்.பி.ஜி இணைப்பு கிடைக்காமல் உள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் மியான்மார் எல்லையையொட்டிய சாங்லாங்க் மாவட்டத்தின் மியாவ், டிவிஷன் பகுதிக்குட்பட்ட விஜயநகர் கிராமத்தில் 57 ஆண்டுகளுக்கு பின் தற்போது தான் எல்.பி.ஜி இணைப்பு கிடைத்துள்ளது.

இந்த கிராமத்தில் சுமார் 15 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மாவட்ட தலைநகரில் இருந்து சுமார் 157 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்த கிராமத்திற்கு போதுமான சாலை வசதிகள் கிடைப்பதில்லை. அதுமட்டுமின்றி சிலிண்டர் இணைப்புக்கான ஆவணங்கள் அந்த மக்களிடம் இல்லை என்பதால் அவர்களுக்கு எல்.பி.ஜி இணைப்பு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், இந்த பகுதி மக்கள் மிகவும் வேதனைக்குள்ளாகினர். குறிப்பாக மழைக்காலங்களில் அவர்கள் படும் துன்பங்கள் சொல்லிடங்காதவை.

இந்நிலையில், அந்த மக்கள் மாநில அரசாங்கத்திடம் தங்களுக்கு சிலிண்டர் இணைப்பு வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து, மாநில அரசின் முயற்சியை அடுத்து அவர்களுக்கு சிலிண்டர் வழங்கப்பட்டது. அந்த பகுதி மக்கள் சிலிண்டர் இணைப்பு கிடைத்ததை கொண்டாடி வருகின்றனர்.



Source - Maalai Malar

Similar News