பா.ஜ.க ஆட்சியில் எல்லையில் 6 சாலை சுரங்கங்கள் - ஒன்றை மட்டுமே வைத்து ஒப்பேத்திய காங்கிரஸ் : மெல்ல மெல்ல கிழியும் முகத்திரை!

பா.ஜ.க ஆட்சியில் எல்லையில் 6 சாலை சுரங்கங்கள் - ஒன்றை மட்டுமே வைத்து ஒப்பேத்திய காங்கிரஸ் : மெல்ல மெல்ல கிழியும் முகத்திரை!

Update: 2020-06-23 11:23 GMT

இந்தியா - சீனாவுடனான எல்லையில் 32 சாலை திட்டப் பணிகளை விரைவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

எல்லையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை திட்டங்களின் பணிகள் தொடா்பான உயா்நிலை ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மத்திய பொதுப் பணித் துறை, எல்லை சாலைகள் அமைப்பு, இந்திய-திபெத்திய எல்லைக் காவல் படை ஆகியவற்றின் உயர அதிகாரிகள் பங்கேற்றனா்.

அப்போது, இந்திய-சீன எல்லையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை திட்டங்களில் 32 திட்டங்களின் பணிகளை விரைவுபடுத்துவது என்று தீா்மானிக்கப்பட்டது.

இதற்காக, சம்பந்தபட்ட அனைத்து துறைகளும் ஒத்துழைப்பை வழங்க முடிவு செய்யப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்திய-சீன எல்லையில் சுமார் 73 சாலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், 12 சாலைகளின் பணிகள் மத்திய பொதுப் பணித் துறையால் மேற்கொள்ளப்படுகின்றன.

எல்லை சாலைகள் அமைப்பின் சாா்பில் 61 திட்டப் பணிகள் நடைபெறுகின்றன. இதில் 3 சாலைகள், லடாக் பகுதியில் அமைக்கப்படும் முக்கிய சாலைகளாகும். 

கடந்த 2014 முதல் இப்போது வரை 4,764 கிமீ தொலைவுக்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2008 முதல் 2014 வரையிலான காலத்தில் 3,610 கிமீ தொலைவுக்கே சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன.

2014 முதல் இதுவரை 6 சாலை சுரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 2008 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் ஒரு சுரங்கம்தான் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News