8,800 சதுர அடி கோவில் நிலம்.. வீடு, உள்வாடகை என சொகுசாக வாழ்ந்த ஆக்கிரமிப்பாளர்.!

8,800 சதுர அடி கோவில் நிலம்.. வீடு, உள்வாடகை என சொகுசாக வாழ்ந்த ஆக்கிரமிப்பாளர்.!

Update: 2020-12-19 14:03 GMT

கோவில்களுக்குச் சொந்தமான முக்கிய இடங்களில் அமைந்துள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை தனியார் அமைப்புகளும் தனிநபர்களும் ஆக்கிரமித்துக் கொண்டு காலி செய்ய மறுப்பது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் சென்னையில் பழண்டியம்மன் கோவிலுக்கு சொந்தமாக பட்டினப்பாக்கம்- சாந்தோம் நெடுஞ்சாலையில், நடுக்குப்பம் பகுதியில் உள்ள 8,800 சதுர அடி நிலம் அறநிலையத் துறையால் மீட்கப்பட்டுள்ளது.

இந்த நிலம் கவுசல்யா என்பவருக்கு குத்தகைக்கு விடப்பட்டிருக்கிறது. அவர் இந்த நிலத்தை தனியார் உணவகம் ஒன்றுக்கு கார் பார்க்கிங் வசதிக்காக உள் வாடகைக்கு விட்டிருக்கிறார். இது போதாதென்று வருடாந்திர குத்தகை தொகையையும் பல ஆண்டுகளாக செலுத்தாமல் இருந்து வந்துள்ளார். இதனால் நிலுவையில் உள்ள சுமார் ₹2 கோடி ரூபாய் வாடகையை செலுத்த வேண்டும் என்று கோவில் நிர்வாகம் இவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 

ஆனால் வாடகை பாக்கியை செலுத்த மறுத்து அவர் நீதிமன்றத்தில் இணை ஆணையர் அனுப்பிய நோட்டீசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு 8 ஆண்டுகளாக இழுவையில் இருந்ததாக கூறப்படுகிறது. எனினும் இறுதியில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் கோவில் நிர்வாகத்துக்கு சாதகமாகவும் ஆக்கிரமிப்பை அகற்றவும் உத்தரவிட்டது. 
 

இதையடுத்து காவல்துறையினர் உதவியுடன் அறநிலையத்துறை உதவி ஆணையர் தலைமையில் அதிகாரிகள் ₹11.79 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை கையகப்படுத்தினர். நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஒரு வீட்டுக்கும் சீல் வைத்தனர். அறநிலையத்துறை, ஆக்கிரமிப்புகளை நீதிமன்றத்தை நாடியாவது நீக்குவது பாராட்டுக்குரியது தான் என்றாலும் நிலத்தை குத்தகைக்கு எடுப்பவர்கள், ஆக்கிரமிப்பாளர்கள் மீது தொடக்க காலத்திலேயே நடவடிக்கை எடுத்தால் விரைவில் சொத்துகள் மீட்கப்படுவதுடன் நஷ்டமடையாமலும் இருக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Similar News