கமல்ஹாசனின் அண்ணன் 90 வயது சாருஹாசன் மீண்டும் "தாதா" வேடத்தில் மிரட்டல்.!

கமல்ஹாசனின் அண்ணன் 90 வயது சாருஹாசன் மீண்டும் "தாதா" வேடத்தில் மிரட்டல்.!

Update: 2020-07-03 13:52 GMT

சாருஹாசன் தாதாவாக நடித்த கடந்த வருடம் திரைக்கு வந்த படம் "தாதா87". அவர் அந்த தாதா வேடத்தில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ஆச்சரியப்படுத்தினார். படம் வெற்றிகரமாக ஓடியது. விஜய்ஸ்ரீ ஜி, டைரக்ட் செய்திருந்தார். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.

படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. சாருஹாசன்னை வைத்து மீண்டும் இயக்குகிறார் டைரக்டர் விஜய்ஸ்ரீ ஜி.

உள்ளூரில் சாமானியமானவராக இருக்கும் ஒரு தாதா தனது மூளையை பயன்படுத்தி எப்படி உலக தாதாக்களை ஆள்கிறார் என்பதே கதை. நடிகர் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர் ஜுமன், கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஐஸ்வர்யா தத்தா சாண்ட்ரியா, சாந்தினி, அனித்ரா நாயர், ஜூலி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகிறார்கள். மைம் கோபி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

Similar News