முதல்வர் வருகைக்காக அவசரமாக போடப்பட்ட தரமற்ற சாலை, மாட்டிக்கொண்ட பேருந்து - கரூர் அட்ராசிட்டி

கரூரில் முதல்வர் ஸ்டாலின் வருகைக்காக அவசரமாக போடப்பட்ட சாலையில் பேருந்து ஒன்று சிக்கிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-07-02 06:43 GMT

கரூரில் முதல்வர் ஸ்டாலின் வருகைக்காக அவசரமாக போடப்பட்ட சாலையில் பேருந்து ஒன்று சிக்கிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சிக்காக முதலமைச்சர் ஸ்டாலின் வருகை புரிந்தார், இந்த நிலையில் முதல்வர் வருகிறார் என சாலைகளை நெடுஞ்சாலை துறையினர் அவசர அவசரமாக சீரமைத்தனர்.

அதில் ஒரு பகுதியாக கரூரில் இருந்து தான் தோன்றி மலை செல்லும் முக்கிய சாலையான மாவட்ட ஆட்சியர் சாலையில் சீரமைப்பு பணியை ஊழியர்கள் மேற்கொண்டனர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வரும் பிரதான சாலையில் போடப்பட்டிருந்த தார் சாலையில் நேற்று தனியார் ஜவுளி நிறுவனத்திற்கு வேலை ஆட்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று ஒருபுறம் சிக்கிக்கொண்டது.

பேருந்து ஒருபுறம் சாய்ந்ததில் பேருந்து உள்ள தொழிலாளிகள் பயத்துடன் அலறினார். நல்ல வாய்ப்பாக தொழிலாளர்கள் யாரும் பெரிய காயம் படாமல் மீட்கப்பட்டனர், காவல்துறையினர் பேருந்தை மீட்டு அனுப்பி வைத்தனர். முதல்வர் வருகைக்காக அவசர அவசரமாக தரமற்ற சாலையை போடுவது விபத்து ஏற்படும் வகையில் உள்ளது என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். 


Source - News 18 Tamil Nadu

Similar News