புதிய கல்விக் கொள்கையை வலியுறுத்தும் திரைப்படம்

புதிய கல்விக் கொள்கையை வலியுறுத்தும் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

Update: 2023-06-23 06:15 GMT

நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் மற்றும் ஒரே தேர்வுடன் கூடிய கல்வி முறை வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி ஸ்கூல் கேம்பஸ் என்கிற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பள்ளி மாணவர்கள் பார்ப்பதற்கு பட நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராமநாராயணா சலுகை அளித்துள்ளார்.


அதாவது 3 டிக்கெட்டுகளுக்கு ஒரு டிக்கெட் இலவசம் அளிக்க இருப்பதாக கேந்திர வித்யாலயா சங்கேத நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் "இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டம் ஒரே மொழியில் கற்பித்தல் என்பது இந்த படம் வலியுறுத்தும்" என்றார்.

Similar News