பட்டப்பகலில் பயங்கரம் வழக்கறிஞர் சரமாரி வெட்டி கொலை - மக்கள் பாதுகாப்பில் கேள்விக்குறியாகும் தமிழகம்!
தங்கை திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் ஆறு பேர் கொண்ட கும்பலால் நாச்சியார் கோவிலைச் சேர்ந்த வக்கீல் கொலை செய்யப்பட்டார்.
தங்கை திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் ஆறு பேர் கொண்ட கும்பலால் நாச்சியார் கோவிலை சேர்ந்த சென்னை ஐகோர்ட் வக்கீல் வெட்டி கொலை செய்யப்பட்டார்.தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார் கோவிலை சேர்ந்தவர் சுப்ரமணியன் இவருடைய மகன் சாமிநாதன் இவர் சென்னை ஐகோர்டில் வைக்கீலாக பணியாற்றி வந்தார். இவரது தங்கை தையல்நாயகிக்கும் அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சிநாதன் என்பவருக்கும் தா.பழூர் ஜெயங்கொண்டம் சாலையில் அணை குடம் கிராமத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று காலை திருமணம் நடந்தது.
இதை அடுத்து சாமிநாதன் திருமண மண்டபத்தில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள ஒரு டீ கடைக்கு சென்று தனது செல்போனில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார் .அப்போது அங்கு இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் சாமிநாதனை பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டினர்.இதில் நிலைகுலைந்த சாமிநாதன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த கும்பல் மின்னல் வேகத்தில் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
பட்டப்பகலில் வக்கீல் ஒருவரை மர்ம ஆசாமிகள் வெட்டி கொண்டதை கண்ட வியாபாரிகள் மற்றும் அந்த வழியாக சென்றவர்கள் கத்தி கூச்சலிட்டனர். நாலாபுரமும் சிதறி ஓடின.ர் மேலும் தா.பழூர் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சாமிநாதன் கொலை செய்யப்பட்டது குறித்து தகவல் அறிந்து திருமண மண்டபத்தில் இருந்து அவரது உறவினர்கள் சம்பவ இடத்திற்கு ஓடி வந்து சாமிநாதன் உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த கொலை சம்பவம் பற்றிய தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூத்திரன் கலைக்கதிரவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.