நெல், கரும்பு, வாழைத்தார் போன்ற விளைபொருட்களை சேதம் இன்றி எடுத்துச் செல்ல 'மோனோரெயில்' வடிவ சாதனம்

நெல் கரும்பு வாழைத்தார் போன்ற விளைபொருட்களை சேகரிப்பு மையங்களுக்கு குறைந்த செலவில் எடுத்துச் செல்ல வேளாண் போக்குவரத்து சாதனத்தை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்

Update: 2022-11-03 07:00 GMT

விவசாயிகள் விளைபொருட்களை கஷ்டப்பட்டு விளைவித்தாலும் அதனை குறிப்பிட்ட சேகரிப்பு மையங்களுக்கு எடுத்துச் செல்வதில் பெரும் பிரச்சனையை சந்திக்கின்றனர். ஆற்றல் பற்றாக்குறை இதற்கு ஒரு முக்கிய பிரச்சினையாக கூறப்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் சென்னை ஐ.ஐ.டி ஆராய்ச்சியாளர்கள் விவசாயிகளுக்கான தன்னார்வ நிறுவனத்துடன் இணைந்து இலகுரக 'மோனோரயில்' என்ற வேளாண் போக்குவரத்து சாதனத்தை உருவாக்கியிருக்கின்றனர் . இதற்கு ஆங்கிலத்தில்' புரோட்டோ கேபிள் வே சிஸ்டம்' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. குறிப்பாக தண்ணீர் தேங்கியிருக்கும் நிலங்களில் இருந்து வேளாண் விளைபொருட்களை சேகரிப்பு மையங்களுக்கு எடுத்துச் செல்வது சவால் நிறைந்த பணியாகவே இருக்கிறது .இதனை சென்னை ஐ.ஐ.டி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். போக்குவரத்து சாதனம் நிவர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கிறார்கள்.


தமிழ்நாட்டின் கரூர் மாவட்டம் நஞ்சை தோட்டக்குறிச்சி கிராமத்தில் உள்ள பண்ணையில் இந்த போக்குவரத்து சாதனத்தை சோதனை செய்து பார்த்து அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். இதன் வாயிலாக தொழிலாளர் பற்றாக்குறை, பயிர்களை கையாளும்போது ஏற்படும் பயிர் சேதம், போன்றவற்றை தவிர்க்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து சென்னை ஐ.ஐ.டி எந்திரவியல் துறை பேராசிரியர் சங்கர் கிருஷ்ணபிள்ளை கூறுகையில் இந்திய பண்ணைகளில் இதனை எளிதாக நிறுவிட பொருட்களை குறைந்த செலவில் கொண்டு செல்வதன் மூலம் தொழிலாளர்களின் தேவையை குறைக்கலாம். தரைக்கு மேலே இந்த சாதனம் இயக்கப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் இடையூறுகளும் மிக குறைவாகவே இருக்கும் என்றார். மேலும் அவர் இந்த வேளாண் சாதனம் மிக எளிதான வடிவமைப்பு கருத்துறையும் உதிரி பாகங்களையும் கொண்டது என்றும் எந்த ஒரு உள்ளூர் பண்ணைகளிலும் இதனை எளிதாக செயல்படுத்தி ஒரு கிலோமீட்டர் தூரம் வரை இதன் தூரத்தை நீட்டித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார் .


மேலும் இந்த சாதனத்தை பயன்படுத்துவதால் விளைபொருட்களை கொண்டு செல்லும் போது ஏற்படும் சேதங்களை தவிர்க்கலாம் .வழக்கமாக தலைசுமையாக இந்த வேளாண் விளைபபொருட்களை கொண்டு செல்ல 32 பேர் பணிக்கு தேவை இருக்கும். ஆனால் இந்த சாதனத்தை இயக்க நான்கு பேர் இருந்தால் போதும். ரயில் தண்டவாள அமைப்பில் இயக்கப்படுவதால் வழக்கத்தைவிட இதில் எரிசக்தி பயன்பாடும் செலவும் குறையும். எதிர்காலத்தில் சூரிய ஒளி மின்சக்திகள், சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரி பவர் பேக் மூலம் இதனை மேலும் எளிதாக இயக்க முடியும்.





 


Similar News