அதிகமான குடி போதை காரணமாக சென்னையில் உயிரிழந்த பெண் - அனாதையாகி நிற்கும் குழந்தை

சென்னையில் அதிக மது போதையால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-10-15 11:19 GMT

சென்னையில் அதிக மது போதையால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை வேளச்சேரி அடுத்த அடுக்கு மாடி குறியிருப்பில் வசிப்பவர் பார்த்திபன், இவரது மனைவி சுபத்ரா. சுபத்ரா ஏற்கனவே திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்கிறார். இந்தநிலையில் அளவுக்கு அதிகமாக மது எடுத்துக்கொண்ட காரணத்தினால் சுபத்ரா என்ற பெண் நாக்கு வறண்டு, மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சுபத்ர மது பழக்கத்திற்கு அடிமையானவர் எனவும் நேற்று முன்தினம் வீட்டில் தனிமையாக இருந்த அவர் அதிகமாக மது குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார், வேலைக்கு சென்ற பார்த்திபன் வீடு வந்து பார்த்தபோது சுபத்ரா மூச்சு இல்லாமல் மயங்கிடத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்து மருத்துவமனை அழைத்துச் சென்று பார்த்தபொழுது அவர் இறந்துவிட்டார் என மருத்துவர்கள் கூறினார். இந்நிலையில் பிரேத பரிசோதனை அவருக்கு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.


Source - Asianet News

Similar News