இன்று ஆடி முதல் வெள்ளி :அம்மன் கோவில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!! விழாக்கோலம் பூண்ட சமயபுரம் !!

இன்று ஆடி முதல் வெள்ளி :அம்மன் கோவில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!! விழாக்கோலம் பூண்ட சமயபுரம் !!

Update: 2019-07-19 09:52 GMT



ஆடி வெள்ளியையொட்டி சக்தி ஸ்தலங்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. சமயபுரம் மாரியம்மன் ஆலயம், திருவாணைக்காவல் அகிலாண்டேசுவரி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.





தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் ஒன்றானதும், அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தரால் பாடல்பெற்றதும், அகிலத்தை காப்பவள் என்பதால் திருச்சி திருவாணைக்காவல் அகிலாண்டேசுவரி ஆலயம் பிரசித்தி பெற்றதாகும்.


ஆடிமாதத்தின் போது அம்பாள் இங்கு சிவனை வேண்டி தவமிருந்ததாக ஐதீகம். எனவே இத்தலத்தில் ஆடிவெள்ளி திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இன்று ஆடிமாத முதல் வெள்ளியையொட்டி அதிகாலை 3மணிக்கு நடைதிறக்கப்பட்டது.


அம்பாள் காலையில் துர்க்கையாகவும், உச்சிகாலத்தில் லட்சுமியாகவும், மாலையில் சரஸ்வதியாகவும், இரவில் வராகியாவும் காட்சியளிக்கிறார்.


ஆடிவெள்ளியையொட்டி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகளும் நடைபெற்றது. அம்பாளை தரிசனம் செய்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று தரிசனம் செய்துவருகின்றனர்.


செய்துவருகின்றனர். ஆலயத்தில் வந்து அம்பாளை தரிசனம் செய்ய பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.


இதேபோன்று தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதாக விளங்கும் தமிழகத்தில் பிரசித்திபெற்றதும், சயமத்தில் வந்து சங்கடம்தீர்க்கும் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அதிகாலை நடைதிறக்கப்பட்டது.


முதல் கோவில் பிரகாரத்தில் காத்திருந்த பக்தர்கள் அம்மனை வழிபட்டதுடன், மாவிளக்கிட்டும், உப்பு இட்டும் நேர்த்திக்கடனை செலுத்தினர்.


சமயபுரத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அங்கேயே தங்கி, பின்னர் அம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர்.


Similar News