தமிழக வீரர் அபிநந்தன் கதை திரைப்படமாகிறது! ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் விவேக் ஓபராய் தயாரிக்கிறார்!!

தமிழக வீரர் அபிநந்தன் கதை திரைப்படமாகிறது! ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் விவேக் ஓபராய் தயாரிக்கிறார்!!

Update: 2019-08-24 12:07 GMT


புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழித்தது. இது தொடர்பாக நடந்த சண்டையில் எதிரி நாட்டு விமானத்தை விரட்டி சென்ற போது, இந்திய விமான படையை சேர்ந்த விங் கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தானில் சிக்கி கொண்டார். 


அங்கு ஒரு ராணுவ வீரனாக அவர் காட்டிய கெத்து, ஒவ்வொரு இந்தியனையும் தலை நிமிர செய்தது. பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார். 


இந்த சம்பவங்களை மையமாக வைத்து படம் தயாராகிது. பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் இதனை ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாரிக்கிறார். அவரும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். 


இதுகுறித்து விவேக் ஓபராய் கூறியிருப்பதாவது:-


நமது வீரர்களின் தியாகத்தை மக்களுக்கு சொல்ல வேண்டியது நம் கடமை. அப்போதுதான் வருங்கால தலைமுறை தேசப்பற்றுடன் வளரும். அபிநந்தன் உள்ளிட்ட நமது வீரர்கள் செய்த சாகசம் இந்தப் படத்தில் இடம்பெறும். பாலகோட் தாக்குதல் எப்படி நடந்தது. நம் ராணுவம் எப்படி திட்டமிட்டது. என்பது குறித்து படம் விரிவாக சொல்லும். இதற்கான அனுமதிகளை முறையாக பெற்றிருக்கிறேன். விரைவில் படம் பற்றிய முழு செய்திகளும் வெளியிடப்படும்.


இவ்வாறு விவேக் ஓபராய் கூறினார்.


=====



Similar News