சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை

சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்த 57,000 கோடி செலவில் நாடு முழுவதும் 100 நகரங்களில் 10,000 மின்சார பஸ்கள் இயக்கும் திட்டத்திற்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது.

Update: 2023-08-17 17:30 GMT

நாட்டில் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத பசுமை போக்குவரத்தை ஊக்குவிப்பதற்காக பிரதமரின் ஈ- பஸ் சேவா என்ற திட்டத்திற்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது. இதன்படி நாடு முழுவதும் 169 நகரங்களில் இருந்து 100 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு பத்தாயிரம் மின்சார பஸ்கள் இயக்கப்படும். அமைப்பு ரீதியான பஸ் போக்குவரத்து இல்லாத நகரங்களில் மின்சார பஸ் போக்குவரத்து முன்னுரிமை அளிக்கப்படும். இந்த திட்டத்துக்கான மொத்த செலவு ரூபாய் 57,613 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் மத்திய அரசு தனது பங்காக 20,000 கோடி அளிக்கும்.


டிஜிட்டல் இந்தியா திட்டத்தை நீட்டிக்கவும் மத்திய மத்திய சபை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு ரூபாய் 14 ஆயிரத்து 903 கோடி நிதி ஒதுக்கப்படும் . இந்த திட்டத்தின் கீழ் 5 லட்சத்து 25 ஆயிரம் தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் . இந்திய ரயில்வேயின் ரூபாய் 32,500 கோடி மதிப்பில் ஆன ஏழு திட்டங்களுக்கு மதிய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது . சுமூகமான ரயில் போக்குவரத்துக்கும் பயணத்தை எளிதாக்குவதற்கும் நெரிசலை குறைப்பதற்கும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.


SOURCE :DAILY THANTHI

Similar News