பெண்கள் படித்தால் என்னாவது? கல்லூரிக்கு வந்த மாணவிகளை விரட்டி அடித்த தலீபான்கள்!

Update: 2022-11-03 01:19 GMT

கல்விக்கு தடை 

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் பெண்கள் மீது கெடுபிடியான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். பெண் குழந்தைகள் பள்ளிக்கு கூட செல்ல விடாமல் தடுக்கின்றனர். சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பினாலும், தொடர்ந்து பெண்கள் அடக்கப்பட்டு வருகின்றனர்.

சமீபத்தில் கல்லூரிக்கு படிக்க வந்த மாணவிகளை தலீபான்கள் தாக்கும் வீடியோ வெளியானது.  வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள படாசவுன் கல்லூரி நுழைவு வாயில் முன்பு மாணவிகள் நிற்கின்றனர்.

அவர்களை உள்ளே நுழைய விடாமல் தலீபான்கள் தடுத்து மிரட்டுகின்றனர். அதில் ஒருவன்  மாணவிகளை தாக்கி விரட்டியடிக்கிறார். இதனால் மாணவிகள் அங்கிருந்து ஓடுகிறார்கள்.

பர்தா அணிந்தும் விடவில்லை 

பர்தா அணியாததால் கல்லூரிக்குள் செல்ல அனுமதிக்கவில்லை என்றனர். ஆனால் மாணவிகள் அனைவரும் சரியாக பர்தா அணிந்து இருந்தனர். இருந்தும் வகுப்புக்கு செல்ல விடாமல் தடுத்து விரட்டியடித்துள்ளனர். மாணவிகளை தாக்கியது தலீபான் அரசாங்கத்தின் துணை மற்றும் நல்லொழுக்க அமைச்சகத்தின் அதிகாரி என்பது தெரிய வந்தது.

Input From: DT

Similar News