ஏய் எப்புட்றா? - 16 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த இதயத்தை ஆச்சரியத்துடன் நேரில் பார்த்த பெண்!

தனது சொந்த இதயத்தை நேரில் பார்த்த பெண்மணி எப்படி இது சாத்தியம் என்பது பற்றி காண்போம்

Update: 2023-05-25 07:15 GMT

பிரிட்டனின் ஹாம்ப்ஷையர் (Hampshire) நகரைச் சேர்ந்த ஜெனிபர் சட்டன் (Jennifer Sutton) அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள தமது சொந்த இதயத்தை 16 ஆண்டுகளுக்குப் பிறகு நேரில் சென்று பார்த்துள்ளார். அந்த Hunterian அருங்காட்சியகம் லண்டனில் இருக்கிறது.


ஜெனிபர் தமது 22 ஆவது வயதில் இருதய மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொண்டார். தற்போது அவருக்கு 38 வயதாகின்றது. அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு தமது இதயத்தை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்க ஜெனிபர் சம்மதம் தெரிவித்திருந்தார்.


அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு தமது இதயத்தை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்க ஜெனிபர் சம்மதம் தெரிவித்திருந்தார். உடல் உறுப்பு தானம் செய்ய மற்றவர்களை இது ஊக்குவிக்கும் என்று தாம் நம்புவதாக ஜெனிபர் BBC இடம் கூறினார்.

சொந்த இதயத்தை நேரில் பார்க்கும் அனுபவம் சற்று வித்தியாசமாக இருந்தாலும் அது நன்றாக இருப்பதாக அவர் கூறினார். அந்த இதயம் பார்ப்பதற்குத் தமது நண்பரைப்போல் இருப்பதாகவும் ஜெனிபர் BBC இடம் தெரிவித்தார்.

Similar News