அக்னிபத் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது - டெல்லி உயர் நீதிமன்றம்

அக்னிபத் திட்டத்திற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

Update: 2022-08-26 05:52 GMT

அக்னிபத் திட்டத்திற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ராணுவம், விமானம் மற்றும் கடற்படையில் சேருவதற்கான அக்னிபத் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இத்திட்டத்தின்படி 17 அரை வயது முதல் 23 வயது வரையிலான இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து முப்படைகளின் நான்காண்டு பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அதன் பிறகு அவர்கள் சேவையை பொறுத்து பணியில் தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்தது.

அரசியல் காரணங்களுக்காக இந்த முடிவை எதிர்க்கட்சிகள் எதிர்த்து போராட்டம் நடத்தி வந்தது, இந்நிலையில் திட்டத்திற்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அனைத்து மனுக்களையும் டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த மனுக்கள் டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஸ் சந்திர சர்மா நீதிபதி சுப்ரமணிய பிரகாஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இருதரப்பு வாரங்களில் கேட்ட நீதிபதிகள் அக்னிபத் திட்டத்தை இடைக்கால தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டனர்.


Source - Dinamalar

Similar News